மலையாள சூப்பர்ஸ்டார்கள் மம்முட்டி,மோகன்லால் வீடுகளில் ஐடி ரெய்டு

இந்த நட்சத்திரங்களின் சென்னை, கொச்சி, திருவனந்தபுரம் மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களில் உள்ள வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது.
சென்னை, பெங்களூர், கொச்சி ஆகிய நகரங்களில் இவர்களுக்குச் சொந்தமான வீடுகள், அலுவலகங்கள் உள்ளன. இங்கு காலையில் புகுந்த தனித் தனி அதிகாரிகள் படையினர் அதிரடி ரெய்டு நடத்தினர். வீடுகள் மட்டுமல்லாமல், அலுவலகங்களிலும் ரெய்டு நடந்தது.
சோதனை குறித்து இரு நடிகர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் இந்த சோதனையின்போது கைப்பற்றப்படும் ஆவணங்கள் உள்ளிட்டவை குறித்து இரு நடிகர்களுக்கும் முறைப்படி தெரிவிக்கப்படும் என வருமான வரித்துறை வட்டாரத் தகவல் தெரிவிக்கிறது.
மொத்தம் 80 அதிகாரிகள் இந்த சோதனையில் பங்கேற்றதாக தெரிகிறது.
இந்த ரெய்டு காரணமாக மலையாளத் திரையுலகில் பரபரப்பு நிலவுகிறது.
Comments


Click it and Unblock the Notifications