ரஜினியை அடுத்து அஜீத் தான் பிடிக்கும்: அருள்நிதி
சென்னை: இளம் நடிகர் அருள்நிதிக்கு ரஜினிக்கு அடுத்தபடியாக அஜீத் குமாரைத் தான் பிடிக்குமாம்.
திமுக தலைவர் கருணாநிதியின் குடும்பத்தில் இருந்து கோலிவுட்டுக்கு வந்தவர்களில் ஒருவர் அருள்நிதி. அவர் இனியாவுடன் சேர்ந்து மௌன குரு என்ற படத்தில் நடித்தார். அதன் பிறகு சிறிது இடைவெளிக்குப் பிறகு தற்போது பூர்ணாவுடன் சேர்ந்து தகராறு படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆகிறது.
இது தவிர அவர் மேலும் 2 படங்களிலும் நடிக்கிறார்.

கையில் 2 படங்கள்
அருள்நிதியின் கையில் நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் மற்றும் ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் ஆகிய படங்கள் உள்ளன.

ரஜினி ரசிகர்
அருள்நிதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் ஆவார்.

அஜீத்
ரஜினிக்கு அடுத்தபடியாக அருள்நிதிக்கு அஜீத் குமாரை தான் பிடிக்குமாம்.

அருள்நிதிக்கு டபுள் ட்ரீட் தான்
அருள்நிதிக்கு பிடித்த ரஜினியின் கோச்சடையான் மற்றும் அஜீத்தின் ஆரம்பம் ஆகிய படங்கள் விரைவில் ரிலீஸ் ஆகின்றன.


Click it and Unblock the Notifications











