twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாலியல் தொல்லை பற்றி தைரியமாக பேசுங்கள், நான் இருக்கிறேன்: விஷால்

    By Siva
    |

    சென்னை: சினிமா துறையை சேர்ந்த பெண்கள் பாலியல் தொல்லைகள் குறித்து வேச வேண்டிய நேரம் இது என்கிறார் விஷால்.

    பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் தெரிவித்தார். அவரின் துணிச்சலை பார்த்து பல நடிககைள் தங்களுக்கு நடந்த பாலியல் கொடுமைகள் குறித்து பேசத் துவங்கியுள்ளனர்.

    இந்நிலையில் தமிழ் திரையுலகில் பாடகி சின்மயி பாலியல் தொல்லை குறித்து பேசியுள்ளார்.

    விஷால்

    நம் துறையை சேர்ந்த பெண்கள் பேச வேண்டிய நேரம் இது. நான் அவர்களுக்கு பக்கபலமாக இருப்பேன். அவர்களை பாதுகாக்க குழு அமைப்பேன். நான் சின்மயி, தனுஸ்ரீ தத்தா மற்றும் பிறரை மதிக்கிறேன். சம்பவம் நடந்த உடனே பெண்கள் எங்களிடம் தெரிவிக்க வேண்டும். அமலா பால் அது போன்று எங்களிடம் புகார் தெரிவித்தார். நாங்கள் அவருக்கு உதவி செய்தோம். #MeToo #TimesUp என்று விஷால் ட்வீட்டியுள்ளார்.

    சின்மயி

    விஷாலின் ட்வீட்டை பார்த்த சின்மயி அவரின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அப்போது விழிப்புணர்வு இல்லை. யாரையும் தெரியாது என்று சம்பவம் நடந்த உடனே புகார் தெரிவிக்காதது குறித்து கூறியுள்ளார் சின்மயி.

    நடிகர் சங்கம்

    நடிகர் சங்க பிரச்சனையையே உங்களால் தீர்த்து வைக்க முடியவில்லை. இதில் இதை எப்படித் தீர்த்து வைப்பீர்கள் விஷால்.

    ஸ்ரீ ரெட்டி

    தமிழ் திரையுலகில் உள்ள சிலர் மீது நடிகை ஸ்ரீ ரெட்டி புகார் தெரிவித்தார். அந்த விவகாரம் என்ன ஆனது என்ற கேள்வி எழுந்துள்ளது.

    நடிகைகள்

    இத்தனை நாட்களாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? இது நடப்பது எல்லாம் உங்களுக்கு தெரியாதாக்கும்? கடைசி நேரத்தில் வந்து சமாளிக்கிறார் விஷால் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

    English summary
    Actor Vishal tweeted that, 'It's time, Women in our industry speak up & I wil stand by them. Wil form a committee to protect them I totally respect Chinmayi #TanuShreDuta & others. Women should inform us as soon as such incidents happen. Amala_ams informed 1 such incident & we helped her. #MeToo #TimesUp'
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X