Actor Ajith: சல்மானை தொடர்ந்து அஜித்.. விஷ்ணுவர்தனின் அடுத்தடுத்த லைன்-அப்!

சென்னை: நடிகர் அஜித்குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். படத்தின் சூட்டிங் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அசர்பைஜானில் துவங்கப்பட்டு தொடர்ந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது. புத்தாண்டையொட்டி சில தினங்கள் அஜித் உள்ளிட்ட படக்குழுவினர் சூட்டிங்கிலிருந்து இடைவெளி எடுத்துக் கொண்ட நிலையில், கடந்த இரு தினங்களாக மீண்டும் படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டு தொடர்ந்து வருகிறது. படத்தின் சூட்டிங்கை பிப்ரவரி மாதத்திற்குள் நிறைவு செய்ய படக்குழுவினர் திட்டமிட்டு அதற்கேற்ப சூட்டிங்கை துரிதப்படுத்தி வருவதாக கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரியில் பொங்கல் ரிலீசாக அஜித்தின் துணிவு படம் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. வங்கிக் கொள்ளையை மையமாக கொண்டு வெளியான இந்தப் படம் வசூல்ரீதியாகவும் சிறப்பாக அமைந்தது. இதையடுத்து உடனடியாக விடாமுயற்சி படத்தின் சூட்டிங் துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மே மாதத்தில்தான் படத்தின் டைட்டில், இயக்குநர் உள்ளிட்டவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன. கடந்த சில வாரங்களாக படத்தின் சூட்டிங் அசர்பைஜானில் துவங்கி நடைபெற்று வருகின்றன.

It seems to be Actor Ajith & Director Vishnuvardhan again join for new movie

நடிகர் அஜித்: நடிகர் அஜித்தின் துணிவு படம் கடந்த பொங்கலையொட்டி திரையரங்குகளில் வெளியாகி மாஸ் காட்டியது. வங்கிக்கொள்ளையை மையமாக வைத்து வெளியான இந்தப் படத்தை இயக்குநர் ஹெச் வினோத் இயக்கியிருந்தார். அஜித் -ஹெச் வினோத் கூட்டணியில் மூன்றாவது படமாக வெளியானது துணிவு. இந்தப் படத்தின் வசூலும் சிறப்பாக அமைந்த நிலையில், உடனடியாக விடாமுயற்சி படத்தின் சூட்டிங் துவங்கும் என்று எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், படத்தின் அறிவிப்பே மே மாதத்தில்தான் அஜித் பிறந்தநாளையொட்டி வெளியானது.

அஜித் -ஆதிக் கூட்டணி: இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு படத்தின் சூட்டிங் அசர்பைஜானில் துவங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. புத்தாண்டு மற்றும் சூழல் போன்ற காரணங்களால் இந்த சூட்டிங்கின் இடையில் இருமுறை கேப் விடப்பட்டது. இந்நிலையில் படத்தின் சூட்டிங்கை வரும் பிப்ரவரி மாதத்திற்குள் நிறைவு செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அஜித்தும் இந்த விஷயத்தில் உறுதியாக உள்ளார். அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் இணையவுள்ள ஏகே63 படத்தின் சூட்டிங் மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் துவக்கத்தில் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

விஷ்ணுவர்தனுடன் இணையும் அஜித்: இந்நிலையில் இயக்குநர் விஷ்ணுவர்தனுடன் மீண்டும் அஜித் இணையவுள்ளது ஏறக்குறைய உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏகே64 படத்தில் வெற்றிமாறனுடன் அஜித் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, விஷ்ணுவர்தனுடன் ஏகே65 படத்தில் அஜித் இணைவார் என்று தகவல்கள் வௌயாகியுள்ளன. இதுகுறித்த அறிவிப்பு அடுத்த ஆண்டில்தான் வெளியாகும் என்று கூறப்படுகிறது. தற்போது மகிழ்திருமேனியுடன் விடாமுயற்சியிலும் ஏகே63ல் ஆதிக் ரவிச்சந்திரனுடனும் அடுத்தடுத்து அஜித் பணிபுரியவுள்ள நிலையில், அடுத்த ஆண்டில் அஜித்தை வெற்றிமாறன் அல்லது விஷ்ணுவர்தன், யார் இயக்குவார்கள் என்பது தெரியவரும்.

சல்மானை தொடர்ந்து அஜித்தை இயக்கும் விஷ்ணுவர்தன்: முன்னதாக விஷ்ணுவர்தனுடன் பில்லா, ஆரம்பம் போனற் படங்களில் இணைந்திருந்தார் அஜித். இந்த இரு படங்களும் அஜித் கேரியரில் பெஸ்ட்டாக அமைந்தன. இந்நிலையில் இந்த கூட்டணி மீண்டும் எப்போது இணையும் என்று ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். முன்னதாக ஷெர்ஷா என்ற இந்திப் படத்தை இயக்கியதன்மூலம் பாலிவுட்டிலும் தன்னை சிறப்பாக நிரூபித்துள்ள விஷ்ணுவர்தன், அடுத்ததாக நடிகர் சல்மான்கானின் The Bull படத்தை இயக்கவுள்ளார். இந்தப் படத்தில் நடிகை திரிஷா சல்மான் ஜோடியாக கமிட்டாகியுள்ளார். அனிருத் படத்திற்கு இசையமைக்க கமிட்டாகியுள்ளார். இந்தப் படத்தை முடித்துவிட்டு அஜித்துடன் விஷ்ணுவர்தன் இணைவார் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X