Actor Vijay: விஜய்யுடன் GOAT படத்தில் நடிக்கும் தோனி?.. கேரள ரசிகர்கள் செய்த சிறப்பான சம்பவம்!
சென்னை: நடிகர் விஜய் தற்போது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஷூட்டிங்கிற்காக கேரளா சென்றுள்ளார். திருவனந்தபுரத்தில் இந்த படத்தின் சூட்டிங் நடந்து வருகிறது. நேற்றைய தினம் இந்த படத்தின் ஷூட்டிங்கிற்காக திருவனந்தபுரம் சென்ற விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் வெகு நேரமாக காத்திருந்து வரவேற்பு கொடுத்தனர். தொடர்ந்து விமான நிலையத்திலிருந்து படப்பிடிப்பு நடத்தும் இடம் வரை காரில் சென்ற அவரை பின்தொடர்ந்து சென்று தங்களது அன்பை வெளிப்படுத்தினர். செல்லும் வழியெல்லாம் நடிகர் விஜய்யும் ரசிகர்களுக்கு கையசைத்தவாறு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
GOAT படத்தின் சூட்டிங் சென்னை, பாங்காக் உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலும் சில தினங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாக விஜய் நடிப்பில் வெளியான காவலன் படத்திற்காக கேரளாவில் ஷூட்டிங் நடத்தப்பட்ட நிலையில் தற்போது 14 ஆண்டுகள் கடந்து விஜய் கேரளாவிற்கு ஷூட்டிங்கிற்காக சென்றுள்ளார். கேரளாவில் விஜய்க்கு வெறித்தனமான ரசிகர்கள் அதிகமாக உள்ள நிலையில் அவரை வரவேற்கும் வகையில் ஷூட்டிங் நடக்கும் கிரீன்பீல்ட் மைதானத்தில் விஜய்யின் பேனர்களை வைத்தும் பைக் ஊர்வலங்களை நடத்தியும் கேரள ரசிகர்கள் மாஸ் காட்டினர்.

நடிகர் விஜய்: நடிகர் விஜய் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தன்னுடைய அரசியல் பிரவேசத்தை அறிவித்திருந்தார், இதன்படி தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அவர் தனது கட்சியை அறிவித்துள்ளார். மேலும் தற்போது நடித்துவரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் மற்றும் தளபதி 69 படங்களை தொடர்ந்து தான் சினிமாவில் இருந்து விலகி தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார். இந்நிலையில் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்துவரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஷூட்டிங்கிற்காக கேரளா சென்றுள்ளார். அவரது வருகையையொட்டி நேற்றைய தினம் ஏராளமான ரசிகர்கள் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருந்து விஜய்க்கு சிறப்பான வரவேற்பை கொடுத்தனர்.
கேரளாவில் சூட்டிங்: முன்னதாக இந்த படத்தின் ஷூட்டிங் நடக்கும் கிரீன்பீல்ட் மைதானத்தில் விஜய்யின் பேனர்களை வைத்து மாஸ் காட்டியிருந்தனர். தமிழகத்தில் வரும் 2026ம் ஆண்டு நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிட உள்ளது. இதற்கான முன்னோட்டமாக தற்போது கேரளா ரசிகர்கள் இந்த மைதானத்தில் விஜய்யின் கட்சி பெயரையும் சேர்த்து பேனர்களை அமைத்து இருந்தனர். மேலும் எம்எஸ் தோனி மற்றும் சிஎஸ்கே அணியின் பேனர்களும் இந்த மைதான வளாகத்தில் வைக்கப்பட்டிருந்தன. இதனால் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் கேமியோ ரோலில் தோனி நடித்துள்ளாரா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
விஜய்யுடன் இணையும் தோனி?: ஆனால் ஐபிஎல் தொடரில் பிஸியாக உள்ள தோனி படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும் கூறப்பட்டுள்ளது. தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதத்தில் நிறைவடையவுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் இந்தப் படம் ரிலீசாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தை தொடர்ந்து தளபதி 69 படத்தில் இணைய உள்ளார் விஜய். இந்த படத்தை பிரபல தெலுங்கு பட நிறுவனமான டிவிவி என்டர்டெயின்மென்ட் தயாரிக்க உள்ள நிலையில் அடுத்த மாதத்தில் இந்த படத்தின் இயக்குனர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.
ரசிகர்கள் காத்திருப்பு: தளபதி 69 பட அறிவிப்பிற்காகவும் GOAT படத்தின் அடுத்த அப்டேட்டிற்காகவும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. படத்தில் நடிகர் விஜய் ஒரு பாடலை பாடியுள்ள நிலையில் அந்தப் பாடல் முதலில் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இந்தப் படத்தின் டைட்டில் பாடலில் பிரஷாந்த், பிரபுதேவா உள்ளிட்ட படக்குழுவினர் விஜய்யுடன் இணைந்து ஆட்டம் போட்டுள்ளனர். இதனால் இந்தப் படத்தின் முதல் பாடல் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











