சினிமாவில் காதலி கிடைப்பது கஷ்டம்… ஆர்யா
சினிமாவில் இருப்பவர்களுக்கு காதலி கிடைப்பது கஷ்டம். இதுவரை நான் யாரையும் காதலிக்க வில்லை என்று கூறியுள்ளார்.
நடிகர் சங்க விவகாரத்தில் இளம் நடிகர்கள் ஒருங்கிணைந்து செயல்படுகின்றனர். விஷால் ஆரம்பித்த விவகாரம் ஜீவாவைத் தொடர்ந்து ஆர்யாவும் இப்போது வாய் திறந்துள்ளார்.
நடிகர் சங்கம் என்பது அனைவருக்கும் பயன்பட வேண்டும் சர்வாதிகாரம் இருக்கக் கூடாது என்று கூறியுள்ளார். ஆர்யா சொன்னதை மேற்கொண்டு படியுங்களேன்.

காதலி கிடைக்கிறது கஷ்டம்
நான் இதுவரைக்கும் யாரையும் காதலிக்க வில்லை. சினிமாவில் காதலி கிடைப்பது ரொம்ப கஷ்டம்.

லவ் மேரேஜ்தான்
என்னுடையது லவ் மேரோஜ்தான் வீட்டில் அரேஞ்ச் செய்தாலும் அந்த பெண்ணை லவ் பண்ணிதான் கல்யாணம் பண்ணிப்பேன்.

நண்பன் விஷால்
விஷாலும் நானும் ஒரே தெரு... கல்லூரி நண்பர்கள். இருவரும் நடிக்க வருவோம் என்று நினைக்கவே இல்லை. இப்போது இருவரும் நடிக்கிறோம்.

நயன்தாரா – நஸ்ரியா
ராஜா ராணி படத்தில் நயன்தாரா, நஸ்ரியா என இரண்டு ஹீரோயின்களுடன் நடித்துள்ளேன். இதில் நயன்தாரா ஸாஃப்ட், நர்ஸியா கோபப்படுவதில் ஃபாஸ்ட்.

எதுவும் திட்டமிடலை
வாழ்க்கையில் எதுவுமே ப்ளான் பண்ணி நடக்கிறதில்லை. எனக்கான பெண்ணை முதல்ல பிடிக்கணும். செட்டாகணும் அப்புறம்தான் திருமணம் பத்தி யோசிக்க முடியும் என்று தெளிவாக கூறியுள்ளார் ஆர்யா.


Click it and Unblock the Notifications











