நள்ளிரவில் கதவை தட்டிய தயாரிப்பாளர்.. கட்டிலுக்கு அடியில் ஒளிய சொன்ன நடிகை.. டி.ஜே. சக்கரவர்த்தி!
சென்னை: 1989வது வருடம் இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் தெலுங்கு படமான சிவா மூலம் நடிகராக அறிமுகமானவர் தான் நடிகர் டி.ஜே. சக்கரவர்த்தி. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்ற இவர், தமிழில் கன்னத்தில் முத்தமிட்டால், சர்வம், கச்சேரி ஆரம்பம், சமர், அரிமா நம்பி போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் சினிமாத்துறையில் நடிகைகளுக்கு இருக்கும் பாதுகாப்பு இன்மையை வெளிச்சம் போட்டு காட்டி உள்ளது.
அதில், திரைத்துறையில் பல அநியாயங்கள் நடக்கின்றன, ஆனால், அவை வெளியில் தெரியாமல் மூடி மறைக்கப்படுகிறது. நான் அருகில் இருந்து ஒரு நடிகையின் பரிதாமமான நிலையை பார்த்தேன். நானும் என் நண்பரும் நடிகருமான சுரேஷும் பிரபல நடிகை ஒருவரின் வீட்டிற்கு சென்றிருந்தோம். அப்போது, அந்த வீட்டிற்கு பெரிய தயாரிப்பாளர் ஒருவர் வந்தார். அவரை பார்த்த நடிகை பயந்து போய் எங்களை கட்டிலுக்கு அடியில் ஒளிந்துக் கொள்ளச் சொன்னார். நாங்களும் என்ன ஆச்சு என கேட்டும் பதில் சொல்லும் நிலைமையில் அந்த நடிகை இல்லை என்பதால், கட்டிலுக்கு அடியில் ஒளிந்து கொண்டோம்.

நடிகர் டி.ஜே. சக்கரவர்த்தி: அப்போது, தாத்தா வயது இருக்கும் தயாரிப்பாளர் நடிகையிடம், வரம்புமீறி, ஆபாசமாக நடந்து கொண்டார். அவர் பேசுவதை கேட்கவே காது கூசியது அந்த அளவிற்கு அந்த நடிகையிடம் அசிங்கமாக பேசினார். இதையெல்லாம் கேட்டு அந்த நடிகை சிரித்துக்கொண்டே இருந்தார். அவர் சென்ற பிறகு நாங்கள் இருவரும் என்ன இது, இதெல்லாம் தேவையா என்று கேட்டோம். அப்போது அவர், நான் படத்தில் நடிக்க வேண்டும், அவரை பகைத்துக்கொண்டால் வாய்ப்பு வராது என்று சொன்னார். இதுதான் சினிமாவில் நடிகைகளின் நிலை
பாதுகாப்பாக இருக்க வேண்டும்: சினிமா பற்றி உண்மை தெரிந்தவர்கள் இதுபற்றி பேச பயப்படுகின்றனர். இதனால் தான் பெரிய நடிகர்களும் தங்கள் மகள்களை இந்த துறைக்கு அனுப்ப தயங்குகிறார்கள். திரைத்துறை அனைவருக்கும் பாதுகாப்பான சூழ்நிலை நிலவவில்லை. இதனால், திரைத்துறைக்கு வரும் இளம் பெண்கள் மிகுந்த கவனத்துடனும் பாதுகாப்புடனும் இருக்க வேண்டும் என நடிகர் டி.ஜே. சக்கரவர்த்தி பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications