''துஷ்மன் கா டுமீல் டுமீ்ல்''...'அச்சுறுத்தும்' ஜே.கே.ரித்தீஸ் எம்.பி!

By Mayura Akilan

ஜே.கே. ரித்தீஸ் வர்றார் என்றாலே அங்கே கூட்டம் களை கட்டும். தமிழ் சினிமாவில் பாப்புலாரிட்டி தேடியதில் 'பவர் ஸ்டாருக்கு' அண்ணன் அவர். எம்.பி ஆகி டெல்லி சென்ற பின்னர் கொஞ்சம் அடக்கி வாசிக்கும் ரித்தீஸ் மீண்டும் சினிமாவில் அதுவும் இந்தி சினிமாவில் நடிக்கப்போவதாக அச்சுறுத்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரோட ஜாலி பேட்டியை படிங்களேன்.

திருச்செந்தூரின் கடலோரத்தில்....

திருச்செந்தூரின் கடலோரத்தில்....

ஜே.கே.ரித்தீஸ் முருக பக்தராம். திருச்செந்தூர் முருகன் கோவில் அவருக்கு பிடித்தமான இடம் என்கிறார் அவர்.

எம்.பி. ஆயிட்டேன்ல...

எம்.பி. ஆயிட்டேன்ல...

சினிமாவில் நடிக்கும் போது சென்னையை சுற்றி வந்த ரித்தீஸ் மக்களவை உறுப்பினராக ஆன பின்னர் ஆளையே காணோம். கேட்டால் தொகுதி வேலை நிறைய இருக்கிறதாக சொல்லிக்கொள்கிறார்.( தலைமறைவு வாழ்க்கையா போச்சோ!)

விஜயகாந்த் டம்மி பீஸ்…

விஜயகாந்த் டம்மி பீஸ்…

காமராஜர், அண்ணா மாதிரி பெரிய தலைவருங்க பேசுன சட்டசபையில விஜயகாந்த் நாக்கை துருத்தி பேசி டம்மின்னு நிரூபிச்சுட்டார். நெட்ல அவரைப்பத்திதான் நிறைய கமெண்ட் விழுதுங்க. ( இது சோகமா, சந்தோசமா? ரித்தீஸ் அண்ணே)

வேட்டைப்புலி ரெடி

வேட்டைப்புலி ரெடி

எம்.பி. ஆனாலும் வேட்டைப்புலி படம் ஆடியோ ரிலீசுக்கு தயாராக இருக்கிறதாம். டெல்லி போனதுல சிக்கன், மட்டன் சாப்பிட்டு தொப்பை போட்டு விட்டாராம். அதை கரைத்துவிட்டு மறுபடியும் ஆட்டத்திற்கு தயாராகி விடுவாராம். ( ஓ மை காட்!)

சீனா, ஆப்கானிஸ்தான் லெகேஷன்…

சீனா, ஆப்கானிஸ்தான் லெகேஷன்…

வேட்டைப்புலி ஓபனிங் பாடலுக்காக சீனா, ஆப்கானிஸ்தான் லெகேசன் பாத்திருக்கிறாராம். இதற்காக தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறாராம்.( அங்கே போயும் பஞ்சு மிட்டாய் கலர் சட்டை போடுவீங்களா)

இந்தியில ரிலீஸ் பண்றேன்….

இந்தியில ரிலீஸ் பண்றேன்….

டெல்லிக்கு போனதுல இந்தி கத்துக்கிட்டராம். ‘வேட்டைப்புலி' படத்தை ‘துஷ்மன்' என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிட திட்டமிட்டிருக்கிறாராம். ( இதை கட்சித் தலைவருக்கு போட்டு காட்டுவீங்களா?)

எப்படியோ டெல்லியில இதை வச்சு காமெடி பண்ணாம இருந்த சரிதான்...!

More from Filmibeat

Read more about: rithish kollywood cinema
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X