காதலில் இருந்து அரசியலுக்கு தாவிய 'பொடியன்' ஜெய்
சென்னை: ஜெய் அரசியல் பின்னணி கொண்ட கதை உள்ள படத்தில் நடிக்கிறார்.
அரசியல் கதையம்சம் உள்ள படங்கள் என்றாலே பிரச்சனை கிளம்பிவிடுகிறது. ஏ. எல். விஜய் இயக்கத்தில் விஜய் நடித்த தலைவா படம் பட்டபாட்டை பார்த்த பிறகு அரசியல் கதை கொண்ட படங்களில் நடிக்க நடிகர்கள் அஞ்சுகிறார்கள்.
அரசியல் படத்தில் நடிப்பானேன், பின்னர் தலைதெறிக்க ஓடுவானேன் என்று நடிகர்கள் நினைக்கிறார்கள். இந்நிலையில் ஜெய் துணிச்சலாக ஒரு முடிவை எடுத்துள்ளார்.

காதல்
இத்தனை காலமாக படங்களில் ஹீரோயினை சுற்றி சுற்றி வந்து காதல் செய்து வந்தார் ஜெய். அண்மையில் வெளியாகி ஹிட்டான ராஜா ராணியில் ஜெய்யின் கதாபாத்திரம் பேசப்பட்டது.

அரசியல்
இப்படி காதல் காதல் என்று இருந்த ஜெய் தற்போது முதன்முறையாக அரசியல் கதை கொண்ட படத்தில் நடிக்கிறார்.

பொடியன்
அரசியல் படத்திற்கு பொடியன் என்று பெயர் வைத்துள்ளனர். படத்தை மணிமாறன் இயக்குகிறார். தலைப்பில் எந்த விவகாரமும் இல்லை. அதனால் தலைப்பு பிரச்சனை வராது என்று நம்புவோம்.

ஜனவரியில் படப்பிடிப்பு
பொடியன் நட்பு மற்றும் அரசியல் கலந்த படம். படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி மாதம் துவங்குகிறது. சிறார்களை பொடியன் என்று அழைப்பதுண்டு. ஆனால் இந்த படம் வந்த பிறகு அதற்கான பொருளை மக்கள் மாற்றிக் கொண்டு சிறுவர்களை பொடியன் என்று அழைக்க மாட்டார்கள் என்று மணிமாறன் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











