விஜய் போல வந்திருக்க வேண்டியவர்.. ஜெய் சறுக்கியது எங்கே?.. அதுக்குள்ள 40 வயசாகிடுச்சா?

சென்னை: முதல் படமே நடிகர் விஜய்யின் தம்பியாக பகவதி படத்தில் நடித்து அறிமுகமானவர் தான் நடிகர் ஜெய். இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நடிகர் ஜெய்யிடம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மாறுவதற்கு அத்தனை தகுதிகளும் நடிப்புத் திறமையும் இருந்தாலும், அவர் பெரிதாக ஷைன் ஆகாமல் போனதற்கு சில காரணங்கள் உள்ளன.

இன்னமும் காலேஜ் ஸ்டூடன்ட்டாக நடிக்கும் அளவுக்கு திறமை கொண்டவர் நடிகர் ஜெய். அவரது உடல் தோற்றத்தையும் இன்னமும் எங்கேயும் எப்போதும் படத்தில் பார்த்ததை போலவே ஸ்லிம்மாகவே வைத்துள்ளார்.

Jai celebrates today his 40th birthday here we look out about his cinema career graph

கடைசியாக நயன்தாராவுடன் இணைந்து ஜெய் நடித்த அன்னபூரணி திரைப்படம் அவருக்கு திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த படமும் சொதப்பி விட்டது.

40 வயசாகிடுச்சு: 1984ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி சென்னையில் பிறந்தவர் தான் ஜெய். இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். முதல் படமே ஜெய்க்கு விஜய்யின் பகவதி படத்தில் அவருக்கு தம்பியாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்க சினிமாவில் சூப்பராக என்ட்ரி கொடுத்தார். சென்னை 600028, சுப்ரமணியபுரம், சரோஜா, கோவா, எங்கேயும் எப்போதும், ராஜா ராணி, திருமணம் எனும் நிக்கா, கலகலப்பு 2, தீரா காதல் என பல நல்ல படங்களை கொடுத்துள்ளார்.

Jai celebrates today his 40th birthday here we look out about his cinema career graph

தேவாவின் உறவினர்: முதல் படத்திலேயே விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பு ஜெய்க்கு எப்படி கிடைத்தது என பலருக்கும் சந்தேகம் எழத்தான் செய்யும். இசையமைப்பாளர் தேவாவின் அம்மா வழி உறவினர் தான் ஜெய் என்பது குறிப்பிடத்தக்கது. தேவாவுக்கு மருமகன் முறையும் ஸ்ரீகாந்த் தேவாவுக்கு மச்சான் முறையும் உடையவர் நடிகர் ஜெய்.

ஒரு வேளை தான் உணவு: 40 வயதானாலும் இன்னமும் தனது தோற்றத்தை அப்படியே செம சூப்பராக சமீபத்தில் வெளியான லேபில் வெப்சீரிஸ் வரை ஸ்லிம்மாக வைத்திருக்க காரணமே ஒரு நாளைக்கு சூரியன் மறைந்த பின்னர் ஒரே ஒரு முறை மட்டுமே விரும்பியதை சாப்பிடும் டயட்டை ஃபாலோ செய்து வருகிறார். மற்ற வேலைகளில் ஜூஸ் போன்ற நீராகாரம் தான் உணவு என சமீபத்திய பேட்டியில் கூறியிருந்தார்.

Jai celebrates today his 40th birthday here we look out about his cinema career graph

அஞ்சலியுடன் காதல்: எங்கேயும் எப்போதும், கலகலப்பு 2 என தொடர்ந்து அஞ்சலியுடன் நடித்து வந்த ஜெய் அவருடன் காதல் வயப்பட்டார் என்றும் இருவரும் திருமணம் செய்துக் கொள்ள திட்டமிட்டதாக எல்லாம் கிசுகிசு கிளம்பின. அஞ்சலியுடனான காதலில் அதிக ஆர்வத்தை செலுத்தியே பல நல்ல பட வாய்ப்புகளை ஜெய் மிஸ் செய்து விட்டதாகவும் கூறுகின்றனர். காதல் விவகாரத்தில் இவர் சிக்காமல் இருந்திருந்தால், எங்கேயும் எப்போதும், ராஜா ராணி படத்துக்கு பிறகு இவருக்கு கிடைத்த பீக்குக்கு விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் எல்லாம் கிட்டே கூட நெருங்கியிருக்க முடியாது எனக் கூறுகின்றனர்.

Jai celebrates today his 40th birthday here we look out about his cinema career graph

கறுப்பர் கூட்டம்: ராஜா ராணி படத்தை போலவே மீண்டும் நயன்தாரா, ஷங்கர் உதவி இயக்குநர் என நம்பி அன்னபூரணி படத்தில் ஜெய் நடித்தார். ஆனால், அவருக்கு அந்த படம் கை கொடுக்கவில்லை. லேபில் வெப்சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக அறம் படத்தை இயக்கிய கோபி நயினார் இயக்கத்தில் உருவாகி உள்ள கறுப்பர் கூட்டம் படத்தில் ஜெய் நடித்துள்ளார். அந்த படம் வெளியானால் ஜெய்க்கு நிச்சயம் ஒரு நல்ல கம்பேக்காக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X