இன்னொரு முகத்தை காட்டத் துடிக்கும் நடிகர் ஜெய்
சென்னை: நடிகர் ஜெய் தனது இசைத் திறமையை வெளிப்படுத்த துடித்துக் கொண்டிருக்கிறார்.
இளையதளபதி விஜய்யின் தம்பியாக பகவதி படத்தில் நடித்த ஜெய்யை தமிழ்நாடு திரும்பிப் பார்த்தது அவரது சுப்பிரமணியபுரம் படம் வந்த பிறகு தான். படத்திற்கு படம் வித்தியாசம் காட்ட வேண்டும் என்று நினைக்கிறார் ஜெய்.
நடிப்பில் முத்திரை பதிக்க கடுமையாக உழைக்கும் ஜெய் இசையிலும் கவனம் செலுத்துகிறார்.

ட்யூன்கள்
ஜெய் ஏராளமான ட்யூன்கள் போட்டு வைத்திருக்கிறாராம். தன்னை பார்க்க வரும் இயக்குனர்களுக்கு அந்த ட்யூன்களை போட்டுக் காட்டுகிறாராம். ட்யூன்களை கேட்கும் இயக்குனர்கள் உங்களுக்கு இசை கூட வருமா என்று ஆச்சரியத்துடன் கேட்கிறார்களாம்.

இசைக் குடும்பம்
தன் இசைத்திறமையை பார்த்து வியக்கும் இயக்குனர்களிடம் தான் இசைக் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்று தெரிவித்து வருகிறார் ஜெய். எங்க பெரியப்பா தான் தேவா. எங்க அப்பா சபேஷ், சித்தப்பா முரளி ஆகியோர் சேர்ந்து பல படங்களுக்கு இசையமைக்கிறார்கள் என்கிறார் ஜெய்.

இசை ரத்தம்
அப்பா, பெரியப்பா, சித்தப்பா என்று எங்களது குடும்பம் இசைக் குடும்பம். என் உடலிலும் இசை ரத்தம் தான் ஓடுகிறது என்கிறார் ஜெய்.

வாய்ப்பு கிடைத்தால்
இசையமைக்க வாய்ப்பு கிடைத்தால் நடிப்பை போன்று இசைத் துறையிலும் ஒரு ரவுண்ட் வருவேன் என்று கூறும் ஜெய் வாய்ப்பு கேட்டு வருகிறாராம். ஜெய்யை இசையமைக்க வைக்கலாமா என்று சில இயக்குனர்கள் யோசித்தும் வருகிறார்களாம். அப்படி என்றால் விரைவில் ஜெய்யின் மற்றொரு முகத்தை பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











