விஜய் மட்டும் வெல்லாமல் போயிருந்தால்.. ஜெய் ஓபனாக போட்டு உடைச்சிருக்காரு.. வேற லெவல்
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் 108 தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றது. அதனையடுத்து பெரும்பான்மைக்கு தேவையான எம்.எல்.ஏக்கள் ஆதரவு காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட்டுகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளின் ஆதரவோடு பெரும்பான்மையை அடைந்தது. அதேபோல் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்த எம்.எல்.ஏக்களும் தவெகவுக்கு ஆதரவு கொடுக்க; நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பிலும் அக்கட்சி வென்றுவிட்டது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் 108 தொகுதிகளில் தவெக வென்றாலும்; ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை இல்லை. மொத்தம் 118 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்தால்தான் ஆட்சியமைக்க முடியும் என்பதால்; ஆளுநர் அதனை நிரூபிக்க சொன்னார். அதன் காரணமாக மற்ற கட்சிகளுடனான தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தது தவெக. முதலில் காங்கிரஸ் கட்சி தன்னுடைய பத்து வருட கூட்டணியை திமுகவுடன் முறித்துக்கொண்டு தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தது. இனிவரும் உள்ளாட்சி தேர்தல், மக்களவைத் தேர்தலில் எல்லாம் தவெக - காங்கிரஸ் கூட்டணி தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டது.

நம்பிக்கை வாக்கெடுப்பு: காங்கிரஸை தொடர்ந்து கம்யூனிஸ்ட்டுகள், விசிக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு கொடுக்க முதலமைச்சராக பதவியேற்றார் விஜய். அதனையடுத்து அதிமுகவில் இருந்து குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான எம்.எல்.ஏக்களும் விஜய் ஆட்சிக்கு ஆதரவு கொடுத்தார். தொடர்ந்து நேற்று சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பிலும் இந்த ஆட்சி வென்றுவிட்டது. எனவே இனி வரும் காலங்களில் தவெக ஆட்சிக்கு பெரிய தொந்தரவு இருக்காது என்றே கருதப்படுகிறது.
மகிழ்ச்சியில் திரைத்துறை: ஆகமொத்தம் திரைத்துறையிலிருந்து கலைஞர் கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதாவை தொடர்ந்து நான்காவது ஆளாக தமிழ்நாட்டை ஆளும் நபராக மாறியிருக்கிறார் விஜய். இதை நினைத்து தமிழ் திரையுலகம் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறது. கண்டிப்பாக விஜய் மூலம் திரைத்துறைக்கு நல்லது நடக்கும் என்றும் பெரிய நம்பிக்கையை வைத்திருக்கிறார்கள். இந்நிலையில் தேர்தலில் தவெக வேட்பாளருக்கு ஆதரவாக வேளச்சேரியில் பரப்புரை செய்த ஜெய் கொடுத்திருக்கும் பேட்டி ட்ரெண்டாகியுள்ளது.
ஜெய் பேட்டி: அவர் கொடுத்த பேட்டியில், "நான் எதை பற்றியும் யோசிக்கவில்லை. தவெகவுக்கு எனது சப்போர்ட் இருக்க வேண்டும் என நினைத்தேன். தாமாக எப்படி போவது என யோசித்த சூழலில் அதுவாகவே வந்தது. கரியர், வாழ்க்கை என எதை பற்றியுமே நான் யோசிக்கவில்லை. நல்லது செய்ய வந்திருக்கிறார். எனவே நம் சப்போர்ட் இருக்க வேண்டும் என நினைத்தேன். அதேபோல் என் மீது இருக்கும் அக்கறையில் நிறைய பேர் பரப்புரைக்கு போக வேண்டாம் என சொன்னார்கள். உன் கரியர் காலி ஆகிவிடும் என்று சொன்னார்கள்.
விஜய் அண்ணாதான் வருவார் என்ற நம்பிக்கை எனக்கு ரொம்பவே இருந்தது. அதில் நம் பங்கு இருக்க வேண்டும் என்றுதான் நினைத்தேன். மற்றபடி எதிர்காலம் பற்றியோ, கரியர் பற்றியோ எதையும் யோசிக்கவே இல்லை" என்றார். முன்னதாக பகவதி படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்துதான் ஜெய் தனது கரியரை ஆரம்பித்தார் என்பது நினைவுகூரத்தக்கது.


Click it and Unblock the Notifications
