ஜெயிலர் 2வில் ரசிகர்களுக்கு மெகா சர்ப்ரைஸ்.. தியேட்டரில் தீ பற்றப்போவது உறுதி

சென்னை: நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் திரைப்படம் ஜெயிலர் 2. அவருக்கான போர்ஷன்கள் எல்லாம் முடிந்துவிட்டன. கண்டிப்பாக இந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகும் என உறுதியாக நம்புகிறார்கள் ரசிகர்கள். இப்படத்தில் ஷாருக்கான் நடிப்பதாக இருந்தார். ஆனால் சில காரணங்களால் வெளியேறிவிட்டார். அவருக்கு பதிலாக யார் நடிப்பார் என்ற ஆவல் அனைவரிடமும் இருந்தது.

ரஜினிகாந்த்தும், நெல்சன் திலீப்குமாரும் முதல்முறையாக இணைந்து பணியாற்றிய திரைப்படம் ஜெயிலர். அந்தப் படத்துக்கு முன்னதாக இரண்டு பேருமே கடுமையான தோல்வியை சந்தித்திருந்தார்கள். நெல்சனை எல்லாம் பலரும் ரோஸ்ட் செய்துவிட்டார்கள். அவர் எடுத்திருந்த பீஸ்ட் திரைப்படம் ஒர்க் அவுட் ஆகாததால் அப்படியான ஒரு நிலைமை ஏற்பட்டது. எனவே அவருடன் ரஜினி சேர்கிறார் என்ற அறிவிப்பு வந்ததும் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் எல்லாம் பதறினார்கள்.

Jailer 2 Hrithik Roshan Replaces Shah Rukh Khan in Rajinikanth s Film
Photo Credit:

மெகா ஹிட்டான படம்: ஆனால் நெல்சன் மீது முழு நம்பிக்கையையும் வைத்திருந்தார் ரஜினிகாந்த். படத்தில் மோகன் லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோர் எல்லாம் சிறப்பு தோற்றத்தி நடித்திருந்தார்கள். படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. ரஜினி ஒரு வெற்றி கொடுத்தால் அதற்கு முன்னதாக அவர் அடைந்த பத்து தோல்விகளை மறக்கடிக்கும்படி வெற்றி கொடுப்பார் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டது. உலகம் முழுவதும் அந்தப் படம் 700 கோடி ரூபாய்வரை வசூலித்தது.

Also Read
திரிஷா அம்மாவும் விஜய் மனைவி சங்கீதாவும் ஒரே நிகழ்ச்சியில்.. அப்போது என்ன நடந்தது தெரியுமா?
திரிஷா அம்மாவும் விஜய் மனைவி சங்கீதாவும் ஒரே நிகழ்ச்சியில்.. அப்போது என்ன நடந்தது தெரியுமா?

ஜெயிலர் 2 ஸ்டார்ட்: அந்த வெற்றியால் உற்சாகமடைந்த கலாநிதி மாறன் ரஜினி, நெல்சனுக்கு காரை பரிசாக கொடுத்துவிட்டு; அடுத்த படத்துக்கு அட்வான்ஸ் தொகைக்கான செக்கையும் கொடுத்தார். அதனையடுத்து ஜெயிலர் 2வுக்கான வேலைகள் தொடங்கின. ரஜினியும் வேட்டையன், கூலி படங்களுக்கு பிறகு இதில் நடித்தார். கூலி படத்தில் சந்தித்த தோல்விக்கு இதில் பதிலடி கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு எல்லோருக்கும் எழுந்திருக்கிறது.

நோ சொன்ன ஷாருக்கான்: ஜெயிலரில் நடித்தவர்கள் இதில் கேமியோ ரோல் செய்தாலும்; இன்னும் சிலரையும் இதில் நடிக்க வைக்க திட்டமிட்டார் இயக்குநர். முதலில் ஷாருக்கானிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அவர் நோ சொல்லிவிட்டார். கூலியில் அமீர்கானை வைத்து செய்தது மாதிரி தனக்கும் நடந்துவிடுமோ என அஞ்சிதான் அவர் இப்படி ஒரு முடிவை எடுத்ததாகவும் சோஷியல் மீடியாவில் பேச்சுக்கள் அதிகரித்தன.

ஹிருத்திக் ரோஷன்?: இந்நிலையில் ஜெயிலர் 2 பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது ஷாருக்கானுக்கு பதில் ஹிருத்திக் ரோஷன் இந்தப் படத்தில் நடிப்பார் என்றும்; சமீபத்தில்தான் ஓகே சொன்னார் எனவும் தெரிகிறது. விரைவில் அவருக்கான ஷூட்டிங்கையும் தொடங்குவதற்கு இயக்குநர் பிளான் செய்திருக்கிறாராம். அந்த ஷூட்டை முடித்துவிட்டு பூசணிக்காயை உடைத்துவிடுவார்களாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X