ஜெயிலர் 2வுக்கு நோ சொன்ன ஷாருக்கான்.. வேறு யார் நடிக்கிறார் தெரியுமா?.. இவர் லிஸ்ட்லையே இல்லையே

சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கிவரும் படம் ஜெயிலர் 2. இன்னும் மூன்று நாட்களுக்கான ஷூட்டிங் பாக்கி இருப்பதாக சமீபத்தில்தான் ரஜினி தெரிவித்திருந்தார். இதற்கிடையே இப்படத்தில் ஷாருக்கான் நடிக்கிறார் என்று தகவல்கள் வந்தன. ஆனால் அவர் படத்தில் நடிப்பதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார். இதனையடுத்து அவருக்கு பதிலாக இன்னொரு பெரிய ஹீரோ ஜெயிலர் 2வில் நடித்திருப்பதாக புதிய தகவல்கள் வந்திருக்கின்றன.

ரஜினியும், நெல்சனும் முதன்முறையாக இணைந்த ஜெயிலர் படம் இரண்டு பேருக்குமே மறக்க முடியாது. ஏனெனில் அந்தப் படத்துக்கு முன்பு அவர்கள் பணியாற்றிய படங்கள் படுதோல்வியை சந்தித்திருந்தன. அதன் காரணமாக அவர்களது திரையுலக கரியரே காலி; இனிமேல் அவர்களால் எழுந்திருக்கவே முடியாது என்று ஏகத்துக்கும் பேச்சுக்கள் வந்தன. மேலும் நெல்சனை நம்பி ரஜினி ஜெயிலர் படத்தில் கமிட்டே ஆகியிருக்கக்கூடாது. கண்டிப்பாக படம் படுதோல்வியைத்தான் சந்திக்கும் என்றும் அனைத்தும் தெரிந்த மாதிரி சிலர் ஆரூடம் கூறினார்கள்.

Jailer 2 Pawan Kalyan Replaces Shah Rukh Khan in Rajinikanth Film
Photo Credit:

மெகா ஹிட்டான படம்: ஆனால் அப்படி பேசியவர்களின் வாயை அடைக்கும்படி ஆகிவிட்டது ஜெயிலர் ரிசல்ட். ரஜினிக்கான மாஸ் காட்சிகள் ஓவர் டோஸ் ஆகாமலும், க்ளாஸ் காட்சிகளையும் வைத்தும் கலக்கியிருந்தார். அனிருத்தும் தன் பங்குக்கு இசையை தரமாக கொடுக்க படம் மெகா ப்ளாக் பஸ்டர். உலகளவில் மொத்தம் 700 கோடி ரூபாய் வரை வசூலித்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தது. அதுமட்டுமின்றி ரஜினி, நெல்சன், அனிருத் ஆகியோருக்கு விலையுயர்ந்த சொகுசு கார்களையும் கிஃப்ட்டாக கொடுத்தார் தயாரிப்பாளர் கலாநிதி.

ஜெயிலர் 2: மேலும் அடுத்த படத்துக்கான செக்கையும் அப்போதே நெல்சனுக்கு கொடுத்திருந்தார். அந்தப் படம் ஜெயிலர் 2. முதல் பாகம் போன்றே இந்தப் பாகத்தையும் பெரிய வெற்றியாக கொடுத்துவிட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார். இப்படத்தில் ரஜினியுடன் வித்யா பாலன், பாலைய்யா உள்ளிட்டோரும் நடிப்பதாக தகவல்கள் கசிந்தன. முதல் பாகத்தில் சிவராஜ்குமார், மோகன் லால் உள்ளிட்டோரை செம மாஸாக காட்டியிருந்தார் நெல்சன். எனவே இந்தப் பாகத்தில் நடிக்கும் கெஸ்ட் நடிகர்களையும் அப்படியே காண்பிப்பார் என்று கருதப்படுகிறது.

Also Read
ஜனநாயகன் நம்பர் 1.. விஜய் படம் இப்படி லீக் ஆகிடுச்சே?.. புலம்பும் திருப்பூர் சுப்ரமணியம்
ஜனநாயகன் நம்பர் 1.. விஜய் படம் இப்படி லீக் ஆகிடுச்சே?.. புலம்பும் திருப்பூர் சுப்ரமணியம்

படத்தில் ஷாருக்கான்: வித்யா பாலன், பாலைய்யா தவிர்த்து பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கானும் முக்கிய ரோலில் நடிப்பதாகவும்; அவரும், ரஜினிகாந்த்தும் படத்தின் ப்ளாஷ்பேக்கில் நண்பர்களாக வரும்படி திரைக்கதையை நெல்சன் அமைத்திருக்கிறார் என்றும் படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவித்தது. ஆனால் கிங் படத்துக்கு போட்ட கெட்டப்பை மாற்ற முடியாது என்பதால் ஜெயிலர் 2வில் தான் நடிக்கவில்லை என்பதை சமீபத்தில் உறுதிப்படுத்தியிருந்தார் ஷாருக். எனவே அவருக்கு பதிலாக யார் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்திருந்தது.

படத்தில் பவன் கல்யாண்: இந்நிலையில் ஷாருக்கானுக்கு பதிலாக பவன் கல்யாணை வைத்து சமீபத்தில்தான் நெல்சன் திலீப்குமார் ஷூட்டிங்கை முடித்ததாகவும்; அவருக்கு செம மாஸான சீன்களை இயக்குநர் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே தெலுங்கு நடிகர் பாலைய்யா இதில் இருக்கிறார். இப்போது பவனும் வந்திருப்பதால் ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் படத்தின் வியாபாரத்துக்கு எந்த தொந்தரவும் இருக்காது என்று திரைத்துறையினர் கூறுகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X