விஜய் கொடுத்த கிறிஸ்துமஸ் ட்ரீட்.. ஜன நாயகன் படத்தின் ‘செல்ல மகளே’ பாடல்.. தளபதி பாடியிருக்காராம்!

சென்னை: ஜன நாயகன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளை அனிருத் உடன் இணைந்து விஜய் பாடிய நிலையில், 3வது சிங்கிளாக வெளியாகவுள்ள 'செல்ல மகளே' பாடலையும் தளபதி விஜய் பாடியுள்ளார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரிலீஸ் அறிவிப்புடன் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என ஃபேமிலி மொத்தமும் வந்து பார்க்கக் கூடிய பக்கா கமர்ஷியல் படமாகவே ஜன நாயகன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்த பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என்றும் அரசியல் படமென்றும் கூறப்பட்டு வரும் நிலையில், ஜன நாயகன் படத்தின் கதை டோட்டலாக வேற மாதிரி இருக்கும் என படத்தின் போஸ்டர்களை பார்த்து ரசிகர்கள் எதிர்பார்ப்பை எகிற விட்டு வருகின்றனர்.

Jana Nayagan 3rd single date announced by KVN A Perfect Christmas treat from Vijay
Photo Credit:

மலேசியாவில் நாளை மறுநாள் ஜன நாயகன் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ள நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஒரு சின்ன அப்டேட் ட்ரீட் கொடுத்துள்ளார் விஜய். கண்டிப்பாக இன்று மாலை விஜய் குரலில் ஒரு சின்ன க்ளிம்ப்ஸ் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜன நாயகன் 3வது சிங்கிள்: விஜய்யின் ஜன நாயகன் படத்தில் பகவந்த் கேசரி படத்தில் இடம்பெற்றதை போலவே 'குட் டச் பேட் டச்' காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. மேலும், மமிதா பைஜுவை எடுத்து வளர்ப்பதே விஜய் தான் என்றும் கூறி வந்த நிலையில், இதுவரை குழந்தை சீனையே காட்டவில்லையே என நினைத்த ரசிகர்களுக்கு 'செல்ல மகளே' பாடல் 3வது சிங்கிளாக நாளை டிசம்பர் 26ம் தேதி வெளியாகப் போகிறது என்கிற அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. கண்டிப்பாக இந்த பாடல் வெளியானால், ஜன நாயகன் பகவந்த் கேசரி ரீமேக்கா? இல்லையா? என்று தெரிந்துவிடும் என்கின்றனர்.

விஜய் பாடிய பாட்டு: ஜன நாயகன் படத்தின் தளபதி கச்சேரி படத்தில் விஜய் பாடிய நிலையில், அனிருத் இசையில், 'செல்ல மகளே' பாடலையும் விஜய் பாடியுள்ளார். இந்த பாடலையும் பாடலாசிரியர் விவேக் தான் எழுதியுள்ளார். இசை வெளியீட்டு விழாவுக்கு முன்பாக 3வது சிங்கிள் வெளியாகவுள்ள நிலையில், இன்றிலிருந்தே ஜன நாயகன் வைப் ஆரம்பித்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X