Jana Nayagan: செம ட்விஸ்ட் வச்ச வினோத்.. ஜன நாயகன்ல சயின்ஸ் ஃபிக்‌ஷன்.. இதை நோட் பண்ணீங்களா?

சென்னை: பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் உரிமையை பெற்று ஜன நாயகன் படத்தை உருவாக்கினாலும், படத்தின் 2ம் பாதி மற்றும் வில்லன் போர்ஷனில் மிகப்பெரிய மாற்றத்தை இயக்குநர் வினோத் செய்திருக்கிறார் என்றே தெரிகிறது.

அதிலும், அந்த ரோபோட் சண்டை எல்லாம் டிரைலர் காட்சியில் சும்மா தெறிக்கிறது. மதன் கெளரியின் கேமியோ சீன் வேறு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Jana Nayagan has science fiction twist is create hype among Thalapathy Vijay fans

பகவந்த் கேசரி படத்தை பார்த்த ரசிகர்களுக்கு கண்டிப்பாக ஒரு மிகப்பெரிய சர்ப்ரைஸை இயக்குநர் வினோத் ஜன நாயகன் படத்தில் வைத்திருக்கிறார் என்றே தெரிகிறது என ரசிகர்கள் டிரைலரை டீகோட் செய்து வருகின்றனர்.

ஆக்‌ஷன் தளபதி: பகவந்த் கேசரி படத்தில் பாலகிருஷ்ணா லாரியில் எல்லாம் பறந்துக் கொண்டு வந்து ஸ்ரீலீலாவை காப்பாற்றுவார். இடைவேளைக்கு முந்தைய சண்டைக் காட்சி தெலுங்கிலேயே தாரை தப்பட்டை கிழியும். ஆக்‌ஷன் தளபதி விஜய் அந்த காட்சியை எல்லாம் அதிரி புதிரி பண்ணியிருப்பார் என்பது டிரைலரில் இடம்பெற்ற அந்த காட்சிகளை பார்த்தாலே தெரிகிறது. மமிதா பைஜுவை ராணுவத்தில் சேர்க்க போராடுவது, அவருக்குள் இருக்கும் பயம், பெண்களை புலியாக மாற்ற வேண்டும் என்கிற கதை என அப்படியே அனில் ரவிப்புடியின் படத்தை எடுத்துக் கொண்டு உருவாக்கினாலும், தனக்கே உரித்தான ஸ்டைலில் இயக்குநர் வினோத் சில சம்பவங்களையும் உள்ளே வைத்திருக்கிறார்.

Jana Nayagan has science fiction twist is create hype among Thalapathy Vijay fans
Photo Credit:

ரோபோவுடன் சண்டை: புராஜெக்ட் 'வி' அமல்படுத்த அந்த படத்தில் வில்லன் போராடும் நிலையில், ஜன நாயகன் படத்தில் பாபி தியோல் புராஜெக்ட் 'ஓம்'மை உருவாக்கி ஒட்டுமொத்த தேசத்துக்கும் பெரிய சிக்கலை உருவாக்க அதை எப்படி சமாளிக்கிறார் தளபதி விஜய் என்பது தான் 2வது பாதியாக இருக்கும் என தெரிகிறது. மேலும், அதில், ரோபோவுடன் விஜய் சண்டை போடும் காட்சிகள் டிரைலரில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து செம ட்விஸ்ட் என சொல்ல வைத்திருக்கிறது.

மதன் கெளரி கேமியோ: விஜய்யின் ரசிகரான மதன் கெளரி இந்த படத்தில் அந்த சயின்ஸ் ஃபிக்‌ஷன் போர்ஷனில் இடம்பெற்றிருப்பதை டிரைலரில் கண்டுபிடித்த ரசிகர்கள் கண்டிப்பாக 2வது பாதி வேற படமாக கண்டிப்பாக வினோத் கிண்டியிருப்பார் என்கின்றனர். லியோ படம் முதல் பாதி ஹிஸ்டரி ஆஃப் வயலென்ஸ். ஆனால், ஃபிளாஷ்பேக் காட்சிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டு படத்தை சொதப்பியது போல சொதப்பாமல் இருந்தால் சரி என்றும் கூறுகின்றனர்.

Jana Nayagan has science fiction twist is create hype among Thalapathy Vijay fans
Photo Credit:

டிரெண்டாகாத பராசக்தி: பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்று வரும் நிலையில், சோஷியல் மீடியா முழுவதுமே ஜன நாயகன் டிரைலர் ஹாஷ்டேக் மற்றும் பகவந்த் கேசரி ஹாஷ்டேக் தான் டிரெண்டாகி வருகிறது. சிவகார்த்திகேயன் பேச்சுக்கு பிறகே பராசக்தி டிரெண்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X