விஜய்யின் கடைசி படம்.. கோலிவுட்டிலிருந்து வாழ்த்திய ஒரே நடிகர்.. இவருக்கு ஈகோவே இல்லை ப்பா!

சென்னை: விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் திரைப்படம் இன்னும் சில நாட்களில் வெளியாகவிருக்கிறது. இதுதான் அவருடைய கடைசி படம் என்று சொல்லப்படுவதால்; இப்படத்தின் ரிலீஸ் விஜய் ரசிகர்களுக்கு ஒரு பண்டிகைதான். விரைவில் தமிழ்நாட்டில் டிக்கெட்டுகளுக்கான புக்கிங் தொடங்கவிருக்கிறது. படத்துக்கு யு/ஏ சான்றிதழும் கிடைத்துவிட்டது. ரூட் க்ளியர் ஆகிவிட்டதால் படக்குழுவும், ரசிகர்களும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் 33 வருடங்களாக ரசிகர்களை மகிழ்வித்து, தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்களுக்கு லாபம் கொடுத்தவர் விஜய். அவர் அடித்த எக்கச்சக்க படங்கள் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகியிருக்கின்றன. சூழல் இப்படி இருக்க சில வருடங்களுக்கு முன்பு அவர் அரசியல் கட்சி தொடங்கினார். கட்சி தொடங்கியபோதே இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிப்பேன் என்று அறிவிப்பையும் வெளியிட்டார் அவர். இதனால் ரசிகர்கள் கொஞ்சம் அப்செட்டாகினார்.

ஒன் லாஸ்ட் டைம்: அந்தக் கடைசி படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஜனநாயகன் உருவாகியுள்ளது. இதில் விஜய்யுடன் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் முக்கியமான ரோலை ஏற்றிருக்கிறார்கள். அனிருத் வழக்கம் போல் இசையமைத்திருக்கிறார். இதுதான் கடைசி படம் என்று கருதப்படுவதால்; இதனை எமோஷனலாகவே அணுகுகிறார்கள் தளபதியின் ரசிகர்கள்.

Jana Nayagan Is Vijay s Final Film Ravi Mohan Becomes First Kollywood Star to Congratulate Thalapathy
Photo Credit:

வெளியான ட்ரெய்லர்: இதற்கிடையே இப்படம் பகவந்த் கேசரி ரீமேக்கா இல்லையா என்றும் கேள்விகள் இருந்தன. சந்தேகமே வேண்டாம் இது பகவந்த் கேசரியின் ரீமேக்தான் என்பதை சில நாட்களுக்கு முன்பு வெளியான ட்ரெய்லர் உறுதி செய்துவிட்டது. ரீமேக்காக இருந்தாலும் அப்படியே அந்தப் படத்திலிருந்து இயக்குநர் உருவியிருக்கமாட்டார்; தனது ஸ்டைலிலும் கொஞ்சம் வினோத் டெலிவர் செய்திருப்பார் என்பது விஜய் ரசிகர்களுடைய பெரிய நம்பிக்கையாக இருக்கிறது.

வாழ்த்தாத நடிகர்கள்: இது ஒருபக்கம் இருக்க ஜனநாயகன்தான் விஜய்யின் கடைசி படம் என்று சொல்லப்பட்டாலும்; விஜய்க்கு ஒரு வாழ்த்துகூட அஜித், சூர்யா, சிம்பு, தனுஷ் உள்ளிட்ட நடிகர்கள் எல்லாம் தெரிவிக்கவில்லை. ஜனநாயகன் ட்ரெய்லருக்கும் பெரிய ரெஸ்பான்ஸ் எதையும் அவர்கள் செய்யவில்லை. அதேசமயம் கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி; ட்ரெய்லருக்கு தனது பாராட்டை தெரிவித்திருந்தார். அதேபோல் பராசக்தி ஆடியோ லான்ச்சில் சிவகார்த்திகேயன்கூட, விஜய்யின் கடைசி படம் என்பதை சுட்டிக்காட்டி வாழ்த்தும் வகையில் பேசியிருந்தார்.

ரவி மோகன் வாழ்த்து: இப்படி பல நடிகர்கள் சைலெண்ட்டாக இருப்பதை பார்த்து பலருக்கும் அதிர்ச்சிதான். இந்நிலையில் கோலிவுட் நடிகர்களில் முதல் ஆளாக ரவி மோகன் ஜனநாயகனையும், விஜய்யையும் வாழ்த்தியிருக்கிறார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "தளபதி வெற்றி கொண்டான், விஜய் அண்ணா என்னை பொறுத்தவரை நீங்கள் ஏற்கனவே அனைத்திலும் வெற்றி பெற்றுவிட்டீர்கள். ட்ரெய்லர் சூப்பராக இருக்கிறது. இந்தப் படம் என்னையும் சேர்த்து பலரது இதயங்களை வெல்லும் என்பதில் முழு நம்பிக்கை இருக்கிறது. எப்போதும் உங்கள் ரசிகனாக, சகோதரனாக" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X