ஜனநாயகன் மொத்த படமும் விஜய் தரப்பில் இருந்து தான் லீக் ஆனதா?.. அட இப்படியும் கிளப்புறாங்களே!

சென்னை: விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி மாதம் ரிலீஸாகவிருந்த சூழ்நிலையில்; சென்சார் அதிகாரிகள் முட்டுக்கட்டை போட்டதால் அப்போது ரிலீஸாகவில்லை. நிலைமை இப்படி இருக்க யாருமே எதிர்பார்க்காத வகையில் நேற்று முழு படமும் இணையத்தில் லீக்காகிவிட்டது. இதனால் அனைவருமே அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார். மேலும் யார்தான் இந்த பாதக செயலை செய்திருப்பார்கள் என்று பலரும் கேள்விகளை எழுப்ப தொடங்கியிருக்கிறார்கள்.

விஜய் - ஹெச்.வினோத் கூட்டணியில் உருவாகியிருக்கிறது ஜனநாயகன். பாலைய்யா நடித்த பகவந்த் கேசரி படத்தின் ரீமேக்தான் இது. இருப்பினும் அப்படியே ரீமேக் செய்யாமல் விஜய்க்கு தேவையான சில விஷயங்களை கூடுதலாக சேர்த்து வேலை செய்திருக்கிறார் வினோத். சில மாதங்களுக்கு முன்பு படத்தின் ட்ரெய்லர் வெளியாகி சூப்பர் வரவேற்பை பெற்றது. இதுதான் கடைசி படம் என்று சொல்லப்பட்டிருப்பதால் விஜய் ரசிகர்கள் இதனை கொண்டாடுவதற்கு தயார் நிலையில் இருந்தார்கள்.

Jana Nayagan Leak Controversy Speculation Grows Over Vijay Camp s Possible Role
Photo Credit:

ரிலீஸாகாத படம்: ஆனால் சென்சார் அதிகாரிகள் தரப்பிலிருந்து சிக்கல் எழுந்ததால் படம் ஜனவரி ரிலீஸாகவில்லை. அதனையடுத்து நீதிமன்றத்துக்கு சென்றது பட தயாரிப்பு நிறுவனம். அங்கும் எதுவும் நல்லது நடக்கவில்லை. அதனையடுத்து வழக்கை வாபஸ் பெற்றுவிட்டு படத்தை மறு தணிக்கைக்கு அனுப்பியது கேவிஎன் நிறுவனம். ஆனால் அங்கேயோ அதிகாரிகள் படத்தை பார்க்காமல் நீண்ட நாட்கள் இழுத்தடித்து ஒருவழியாக பார்த்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் படத்தின் பிரச்னை தீர்ந்து ரிலீஸாகும் என ஆவலோடு இருந்தார்கள் ரசிகர்கள்.

Also Read
ஜனநாயகன் லீக்.. எவ்வளவுதான் விஜய்யை டார்கெட் செய்வீங்க?.. கடுப்பான தயாரிப்பாளர்
ஜனநாயகன் லீக்.. எவ்வளவுதான் விஜய்யை டார்கெட் செய்வீங்க?.. கடுப்பான தயாரிப்பாளர்

இணையத்தில் லீக்: ஆனால் அனைவருக்கும் அதிர்ச்சி தரும் விதமாக நேற்று படத்தின் ஐந்து நிமிட காட்சிகள் முதலில் லீக்காகியிருந்தன. அதில் விஜய்யின் இன்ட்ரோ சீன் உள்ளிட்டவைகள் எல்லாம் இருந்தன. அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் முழு படமுமே லீக்காகிவிட்டது. அதை பார்த்து மேற்கொண்டு உறைந்து போனார்கள் ரசிகர்கள். தங்கள் தளபதியின் கடைசி படத்துக்கு இப்படி தொடர்ந்து சிக்கல் கொடுக்கிறார்களே என்று நொந்துகொண்டார்கள். அதேபோல் இதிலும் திமுக மீது பழி போடுவதற்கு அவர்கள் மறக்கவில்லை.

யார் லீக் செய்தது?: இந்நிலையில் புதிய தகவல்களும் இணையத்தில் வட்டமடிக்க ஆரம்பித்திருக்கின்றன. அதாவது இணையத்தில் வெளியான ப்ரிண்ட்டில் எடிட் மார்க்கும் இருக்கிறது. அந்த எடிட் மார்க் இருக்கும் வெர்ஷன் இயக்குநர், நடிகர், எடிட்டர், தயாரிப்பாளர் ஆகியோரிடம்தான் இருக்கும். அப்படி பார்க்கையில் இந்த நான்கு பேரின் தரப்பிலிருந்துதான் படம் லீக்காகியிருக்கும் என குரல்கள் கேட்கின்றன. அதுமட்டுமின்றி இதுவும் விஜய் தரப்பு அரசியல் ஸ்டண்ட்தான். இதை வைத்து அவர் தேர்தலில் அனுதாபம் தேடுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறுகிறார்கள் சிலர். உண்மை என்ன என்பது இயற்கைக்கே வெளிச்சம்.

ரசிகர்கள் கோரிக்கை: படம் தற்போது லீக்காகிவிட்டதால் இனிமேலும் காத்திருக்காமல் படத்தை தயாரிப்பு நிறுவனம் ஓடிடியில் ரிலீஸ் செய்ய வேண்டும். எதில் ரிலீஸானாலும் விஜய்யின் படம் மாஸ்தான். இன்னும் தள்ளிப்போனால் இந்தப் படம் கண்டிப்பாக ஒன்றுமே இல்லாமல் போய்விடும் என கோரிக்கை வைக்க தொடங்கியிருக்கிறார்கள். படக்குழு அப்படி ஒரு முடிவு எடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X