ஜனநாயகன் லீக்.. எவ்வளவுதான் விஜய்யை டார்கெட் செய்வீங்க?.. கடுப்பான தயாரிப்பாளர்

சென்னை: விஜய் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஜனநாயகன் திரைப்படம் நேற்று இணையத்தில் லீக்கானது. அதை பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும் அதிர்ச்சியடைந்தார்கள். விஜய்யின் கடைசி படத்துக்கு இப்படியெல்லாம் தொல்லை கொடுக்கிறார்களே என்று நொந்திருக்கிறார்கள் தவெக தொண்டர்களும், ரசிகர்களும். இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் காட்டமாக போட்டிருக்கும் ட்வீட் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் திரைப்படம் ஜனநாயகன். இதில் அவருடன் மமிதா பைஜு, பூஜா ஹெக்டே என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. இதுதான் அவரது கடைசி படம் என சொல்லப்பட்டிருப்பதால்; இதை திருவிழா போல் கொண்டாடுவதற்கு தயாராக இருந்தார்கள் ரசிகர்கள். ஆனால் சென்சார் அதிகாரிகள் போட்ட முட்டுக்கட்டை காரணமாக அப்போது ரிலீஸாகவில்லை. எவ்வளவு முயற்சித்தும் அதிகாரிகள் குடைச்சல் கொடுத்ததால் நீதிமன்றத்துக்கும் சென்றது படக்குழு.

Jana Nayagan Leak Issue Vijay Fans Concerned Producer Dhananjeyan Reacts
Photo Credit:

மீண்டும் தணிக்கைக்கு: ஆனால் நீதிமன்றத்தில் சில வார விசாரணைக்கு பிறகு சாதகமான நிலைமை உருவாகவில்லை. அதன் காரணமாக வழக்கை வாபஸ் பெற்றுவிட்டு; படத்தை மறு தணிக்கைக்கு அனுப்பி வைத்தது கேவிஎன் நிறுவனம். ஆனால் இந்த முறையும் படத்தை பார்க்காமல் சில முறை இழுத்தடித்தார்கள். இதெல்லாம் அரசியல் காரணமாகத்தான் நடக்கிறது என்பது விஜய் ஆதரவாளர்களின் கருத்து. ஒருவழியாக படத்தை அதிகாரிகள் பார்த்துவிட்டதாகவும்; மே பத்தாம் தேதிக்குள் படம் ரிலீஸாகிவிடும் என்றும் தகவல்கள் வந்தன.

Also Read
இணையத்தில் லீக்கான ஜனநாயகன்.. விஜய் ரசிகர்கள் உண்மையில் பாவம்தான்.. என்னங்க இப்படி ஆகிப்போச்சு?
இணையத்தில் லீக்கான ஜனநாயகன்.. விஜய் ரசிகர்கள் உண்மையில் பாவம்தான்.. என்னங்க இப்படி ஆகிப்போச்சு?

லீக்கான படம்: சூழல் இப்படி இருக்க அனைவருக்கும் அதிர்ச்சி தரும் விதமாக ஜனநாயகன் படத்தின் ஐந்து நிமிட காட்சிகள் இணையத்தில் முதலில் நேற்று லீக்காகின. அதில் விஜய்யின் இன்ட்ரோ காட்சி உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன. அதனையடுத்து முழு படமும் வந்துவிட்டது. மறு தணிக்கைக்கு சென்றிருக்கும் படம் எப்படி லீக்கானது என்று தெரியாமல் தலையை பிய்த்துக்கொண்டிருக்கிறார்கள் பட தயாரிப்பு நிறுவனத்தினரும், ரசிகர்களும். விரைவில் இதுதொடர்பான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

விஜய் தரப்புதான் லீக் செய்ததா?: இது ஒருபக்கம் இருக்க இந்தப் படத்தை லீக் செய்ததே விஜய் தரப்புதான்; இதை வைத்தும் அவர்கள் அரசியல் ஸ்டன்ட் செய்கிறார்கள். அதான் இவ்வளவு ரிலீஸாகிவிட்டதே படத்தை ரிலீஸ் செய்தால் என்ன? என்ற கேள்வி எழுந்து; தேர்தலுக்கு முன்னதாகவே படத்தை ரிலீஸ் செய்ய பொதுவெளியில் அழுத்தம் உருவாவதற்குதான் இப்படி செய்திருக்கிறார்கள் என்பதும் சிலரின் கருத்தாக இருக்கிறது. அவர்கள் அப்படி சொல்வதை கேட்டு மேற்கொண்டு பலருக்கும் அதிர்ச்சி ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கடுப்பான தயாரிப்பாளர்: இந்நிலையில் ஜனநாயகன் லீக் ஆனதற்கு பிரபல தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் கண்டனம் தெரிவித்திருக்கிறார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "ஜனநாயகன் படத்தின் முக்கியமான காட்சிகள், இன்ட்ரோ சீன், க்ளைமேக்ஸ் போன்றவை இணையத்தில் லீக் ஆகியிருக்கிறது. இப்போது முழு படமே லீக்காகிவிட்டதாக வரும் தகவல்கள் கவலைக்குரிய ஒன்று. இது கோபத்தை ஏற்படுத்தும் செயல். இதை செய்தவர் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். கேவிஎன் நிறுவனம் உடனடியாக நீதிமன்றத்தை அணுகி லீக் செய்யப்பட்ட அனைத்து லிங்க்குகளையும் நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அனைவரும் படத்தை பார்த்துவிடுவார்கள். விஜய்யின் கடைசி படத்தை எவ்வளவுதான் டார்கெட் செய்வீர்கள்?" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X