விஜய்யின் ஜனநாயகன் லீக்.. களத்தில் குதித்த ராஷ்மிகா கணவர் விஜய் தேவரகொண்டா.. செம கோபமாம்
ஹைதராபாத்: நடிகர் விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் கசிந்தது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதனை யார் செய்திருப்பார்களோ அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அனைவருமே கோரிக்கை வைத்திருக்கிறார். இவ்விஷயத்தில் விஜய்க்கும், ஜனநாயகனுக்கும் ஆதரவாக ஒட்டுமொத்த திரையுலகமே நிற்கிறது. இந்நிலையில் விஜய் தேவரகொண்டா கோபமாகி ட்வீட் போட்டிருக்கிறார். அதுவும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
விஜய்யும், ஹெச்.வினோத்தும் இணைந்த படம் ஜனநாயகன். ஜனவரி மாதமே ரிலீஸாகியிருக்க வேண்டிய அந்தப் படம் சென்சார் அதிகாரிகள் சான்றிதழ் கொடுக்காததால் ரிலீஸாகவில்லை. கோர்ட்டுக்கு சென்றும் பட தயாரிப்பு நிறுவனத்துக்கு எதுவும் நல்லது நடக்கவில்லை. இதன் காரணமாக வழக்கை வாபஸ் பெற்றுவிட்டு மறு தணிக்கைக்கு படம் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இன்னமும் படத்தை அதிகாரிகள் பார்த்தார்களா இல்லையா என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை. கண்டிப்பாக மே மாதத்தில் படம் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

லீக்கான படம்: ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் அந்தப் படம் நேற்று முன்தினம் இணையத்தில் லீக்காகிவிட்டது. முதலில் சில நிமிட காட்சிகள் மட்டுமே வந்தன. கொஞ்ச நேரத்தில் முழு படமும் வந்துவிட்டது. ஆனால் வெளியாகியிருக்கும் ப்ரிண்ட்டில் EDI_ReF என்று குறிப்பிடப்பட்டிருப்பதால்; இது பட தரப்பிலிருந்தே லீக் செய்யப்பட்டிருக்குமோ எனவும் சந்தேகம் எழுந்தது. அதேசமயம் இந்த விஷயத்தில் ஒட்டுமொத்த திரையுலகமும் விஜய்க்கும், ஜனநாயகனுக்கும் ஆதரவாக நிற்கிறது.
பலரும் ட்வீட்: இதுகுறித்து ரஜினிகாந்த் தனது எக்ஸ் பக்கத்தில், "ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் யாராலோ வெளியிடப்பட்டிருப்பது அதிர்ச்சியையும்,வேதனையையும் அளிக்கிறது. திரை அமைப்புகள் இதற்கு எதிராகக் குரல் எழுப்பி, அரசு இதைச் செய்தவர்களைக் கண்டுபிடித்து கடுமையான தண்டனை அளிக்க வேண்டும். இது போன்ற குற்றம் இனியும் தொடரக்கூடாது" என கூறியிருந்தார். கமலும் தன் பங்குக்கு, "ஜனநாயகன் வெளியானது விபத்து இல்லை. சரியான நடைமுறைகள் சரியான நேரத்தில் நடந்திருந்தால் இப்படி ஒரு நிலை வந்திருக்காது. சான்றிதழ் வழங்குவதில் ஏற்பட்ட தாமதமே பைரசிக்கு வழிவகுத்தது' என தெரிவித்திருந்தார்.
விஜய் தேவரகொண்டா ட்வீட்: மேலும், சூர்யா, சிவகார்த்திகேயன், விஷால், ஜீவா என பலரும் ட்வீட் போட்டிருக்கிறார்கள். இந்நிலையில் நடிகரும், ராஷ்மிகா மந்தனாவின் கணவருமான விஜய் தேவரகொண்டா தனது எக்ஸ் பக்கத்தில், "ஜனநாயகன் படம் லீக்கானது எனக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது. இப்படி ஒரு விஷயம் நடந்தால் என்ன மாதிரியான வேதனை ஏற்படும், எப்படிப்பட்ட உணர்வாக இருக்கும் என்பதை நான் எனது தொடக்க காலத்திலேயே அனுபவித்திருக்கிறேன். குறி வைக்கப்பட்டவராக உணர்வீர்கள். நம்பிக்கை குறைந்துபோகும்.
கனவுகள் இருக்கின்றன: இது ஒருவரை பற்றிய விஷயம் மட்டுமில்லை. இதில் இணைந்து வேலை செய்த நடிகர்கள், இயக்குந்ர்கள் தயாரிப்பாளர்கள் என பலருடைய கனாவும் இதில் இருக்கின்றன. இந்தப் பிரச்னை உடனடியாக சரி செய்யப்பட வேண்டும். இதற்கு பின் இருப்பவர்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டும். அது நடக்கவில்லை என்றால் அது ஒரு சிஸ்டம் தோல்வியடைந்ததை காட்டும்" என குறிப்பிட்டிருக்கிறார். முன்னதாக தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியும் ஜனநாயகனுக்கு ஆதரவாக குரல் எழுப்பியிருந்தார்.


Click it and Unblock the Notifications















