விஜய் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ஜன நாயகன் படக்குழு எடுத்திருக்கும் முடிவு இதுவா?.. ரசிகர்கள் மகிழ்ச்சி

சென்னை: ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் திரைப்படம் ஜன நாயகன். அரசியல் கட்சி தொடங்கியிருப்பதால் இந்தப் படத்தோடு நடிப்பதை நிறுத்தப்போவதாக அறிவித்திருக்கிறார் அவர். எனவே இந்தப் படம்தான் அவரது கடைசி படம் என்று கருதப்படுகிறது. அதன் காரணமாகவும் படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இந்நிலையில் படம் பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய கமர்ஷியல் நடிகர்களில் ஒருவ்ரான விஜய்க்கு திரைத்துறையை பொறுத்தவரை கடைசியாக நடித்த மூன்று படங்களுமே தோல்வியைத்தான் சந்தித்தன. விமர்சன ரீதியாக படம் அடி வாங்கினாலும் வசூல் ரீதியாக அந்தப் படங்கள் பெரிய லாபத்தை கொடுத்திருக்கின்றன என்ற பேச்சும் திரைத்துறையில் பலமாகவே ஓடிக்கொண்டிருக்கிறது. அதேசமயம் வாரிசு படத்தால் அதன் தயாரிப்பாளர் தில்ராஜு பெருத்த நஷ்டம் அடைந்தார் என்ற தகவலும் சொல்லப்படுகிறது. அதனை வைத்து ஒருதரப்பினர் ட்ரோலும் செய்தார்கள்.

அரசியல் கட்சி: சூழல் இப்படி இருக்க அவர் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார். அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் தமிழ்நாட்டு சட்டப்பேரவை தேர்தலில் களம் காண்கிறது அக்கட்சி. சினிமாவில் எப்படி பெரிய தாக்கத்தை உண்டு செய்தோமோ அதேபோல் அரசியல் களத்திலும் தாக்கத்தை உருவாக்க வேண்டும் என்ற தீர்க்கமான முடிவில்தான் இந்த என்ட்ரியை கொடுத்திருக்கிறார் அவர்.

Jana Nayagan Movie Glimpse Will Release On Vijay Birthday June 22
Photo Credit:

ஷூட்டிங், மீட்டிங்: இதனால் உச்சக்கட்ட பிஸியாக அரசியல் களத்தில் சுழன்று வருகிறார் விஜய். முழுக்க முழுக்க இனி அரசியல்தான் என்பதால் கட்சி ஆரம்பித்தபோதே, 'இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிப்பேன்' என அறிவித்திருக்கிறார் அவர். அவரது அரசியல் வருகை பெரிய மகிழ்ச்சியை அவரின் ரசிகர்களுக்கு கொடுத்தாலும் இன்னும் ஒரு படம்தான் என்ற விஷயம் பெரிய சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஒருபக்கம் அரசியல் மீட்டிங்கில் பிஸியாக இருந்தாலும் ஷூட்டிங்கிலும் தவறாமல் கலந்துகொள்கிறார்.

ஜன நாயகன் விஜய்: ஜன நாயகன் படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல், அபிராமி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கிறார். கேவிஎன் நிறுவனம் தயாரிக்கிறது. முதலில் இது அரசியல் ஜானரில் உருவாகும் என்று சொல்லப்பட்டது. ஆனால் அதை வினோத் மறுத்தார். பிறகு பாலகிருஷ்ணா நடித்த பகவந்த் கேசரி படத்தின் ரீமேக்தான் என்றும் குரல்கள் எழுந்தன. அதில் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

எப்போது ரிலீஸ்?: சமீபத்தில்தான் படத்தின் ஷூட்டிங்கில் தன்னுடைய போர்ஷனை விஜய் முடித்தார். அப்போது அவர் ரொம்பவே எமோஷனல் ஆனதாகவும்; அதனை வெளியில் காட்டிக்கொள்ளவில்லை என்றும் படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவிக்கிறது. அடுத்த வருட பொங்கலையொட்டி ஜனவரி 9ஆம் தேதி இப்படம் ரிலீஸாகவிருக்கிறது. கடைசி படம் என்று சொல்லப்பட்டிருப்பதால் பெரிய எதிர்பார்ப்பை படமானது பெற்றிருக்கிறது.

விஜய்யின் பிறந்தநாள்: இந்நிலையில் படம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி இப்படத்தின் க்ளிம்ப்ஸை அவரது பிறந்தநாளான ஜூன் 22ஆம் தேதி வெள்யிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள். ஏற்கனவே விஜய் நடித்த GOAT படத்தின் க்ளிம்ப்ஸும் இதேபோல் விஜய்யின் பிறந்தநாளுக்கு வெளியிடப்பட்டது என்பது நினைவுகூரத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X