ஜகா வாங்கிய ஜன நாயகன்.. பிரபாஸுக்கு பெரிய மச்சம்.. ஜனவரி 9ல் தமிழில் வெளியாகும் ‘தி ராஜாசாப்’!

சென்னை: இந்த பொங்கலுக்கு விஜய்யின் ஜன நாயகன் ரிலீஸ் ஆகி தமிழ்நாட்டில் நிலவி வந்த போஸ்ட்போன் பிரச்சனைக்கு முடிவு கட்டும் என்றும் மிகப்பெரிய வசூல் வேட்டையை குவிக்கும் என எதிர்பார்த்த அனைவருக்கும் மிகப்பெரிய ஆப்பு வைக்கப்பட்டுள்ளது.

கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் ஜனவரி 1ம் தேதியே ஜன நாயகன் ரிலீஸ் என அறிவித்து இருந்தால், எப்படியும் வழக்கு சிக்கல் எல்லாம் முடிந்து ஜனவரி 9 படம் வெளியாகி 10 நாள் விடுமுறை வசூலை அள்ளி குவித்திருக்கும். ஐடியா இல்லாத பாய்ஸ் என நெட்டிசன்கள் ஒரு பக்கம் கலாய்த்து வருகின்றனர். பராசக்தி படத்துக்கு இன்று சென்சார் கிடைத்தால் தான் அந்த படமும் ஜனவரி 10ம் தேதி வெளியாகும் என்கின்றனர்.

Jana Nayagan postponed gives a big boon to Prabhas s The Rajasaab

இந்நிலையில், நான் வரேன் என கிடைத்த சந்தர்பத்தை பக்காவாக பயன்படுத்திக் கொண்டு பாகுபலி ஹீரோ பிரபாஸ் தனது ஹாரர் காமெடி படமான 'தி ராஜாசாப்' படத்தை ஜனவரி 9ம் தேதி தமிழ்நாட்டில் தமிழிலும் வெளியிடும் முடிவுக்கு வந்துவிட்டார்.

3 ஹீரோயின்கள்: மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரிதி குமார் என பிரபாஸுக்கு ஜோடியாக இந்த படத்தில் 3 ஹீரோயின்கள் உள்ளனர். ஜன நாயகன் உடன் ஓவர்சீஸ் கிளாஷ் காரணமாக ராஜாசாப் படத்தின் வசூல் பாதித்த நிலையில், தற்போது ஜன நாயகன் படத்துக்கு அட்வான்ஸ் புக்கிங்காக குவிந்த 50 கோடி பணம் ரீஃபண்ட் ஆகியுள்ளதாகவும் அதனால், ரசிகர்கள் தி ராஜாசாப் படத்தை இந்த சங்கராந்திக்கு பார்க்க ரெடியாகி விட்டனர் என்கின்றனர்.

Jana Nayagan postponed gives a big boon to Prabhas s The Rajasaab

பிரபாஸுக்கு பெரிய மச்சம்: படத்தில் 3 ஹீரோயின்கள் கவர்ச்சி பொங்க நடித்துள்ள நிலையில், காஞ்சனா ஸ்டைல் படமாக தி ராஜாசாப் வெளியாக காத்திருக்கிறது. முதலில் தமிழில் தி ராஜா சாப் திரைப்படம் ஜனவரி 10ம் தேதி ரிலீஸ் என்றே டிரைலர் அறிவிப்பின் போது அறிவித்த நிலையில், தற்போது தமிழில் 9ம் தேதியே படத்தை வெளியிட முடிவு செய்து டிக்கெட் புக்கிங்கை ஆரம்பித்து விட்டனர்.

Jana Nayagan postponed gives a big boon to Prabhas s The Rajasaab

ரோகிணியில் மெயின் ஸ்க்ரீன்: ஜன நாயகன் வராது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகும் முன்பே ரோகிணி தியேட்டர் முதல் ஆளாக மெயின் ஸ்க்ரீனிலேயே தி ராஜாசாப் படத்தை போட்டு விட்டது என்றும் ரசிகர்கள் ரோகிணியை ட்ரோல் செய்து வருகின்றனர். இந்த பொங்கலுக்கு தமிழ் படங்களை விட பிரபாஸ் படம் அதிகம் கல்லா கட்டி விடும் என தெரிகிறது. சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்துக்கு இன்று தணிக்கை சான்றிதழ் கிடைத்தால் அவர் பிரபாஸ் உடன் தான் மோதுவார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X