கடைசி படம்.. கோலிவுட்ல இருந்து ஒருத்தர் வரல.. ஜன நாயகன் டிரைலருக்கு காந்தாரா ஹீரோ ரியாக்‌ஷனை பாருங்க!

சென்னை: ஏஐ எடிட்டில் தான் கோலிவுட் நடிகர்கள் ஒன்றாக ஒரே இடத்துக்கு கூட்டமாக சென்று டீ சாப்பிடுவதும் ஒரே பேருந்தில் பயணிப்பதையும் அன்பாக இருப்பது போல செய்ய முடியும் என ட்ரோல்கள் பறக்கும் அளவுக்கு இங்கே சினிமாவில் மிகப்பெரிய அரசியலே நடைபெற்று வருகிறது.

விஜய்யின் கடைசி படம் ஜன நாயகன் என அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த படத்துக்கு எதிராக செக் வைப்பது போல சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தை ரிலீஸ் செய்கின்றனர். என் மேல எந்தவொரு தப்பும் இல்லை, இது ரெண்டு சைடு தயாரிப்பாளர்கள் மோதல் என சிவகார்த்திகேயன் ஆடியோ வெளியீட்டு விழாவில் உண்மையை பேசி நைசாக கழண்டுக் கொண்டார்.

Jana Nayagan trailer is on fire - Rishab Shetty sends wishes to VIjay for big success

ஜன நாயகன் டிரைலர் வெளியானதில் இருந்தே இந்த படம் பகவந்த் கேசரி ரீமேக் தான் என பலரும் ட்ரோல் செய்து வரும் நிலையில், பிரபலங்கள் எல்லாம் ஜென் மோடுக்கு சென்று சைலன்ட்டாக உள்ளனர். இந்நிலையில், கன்னட திரையுலகில் இருந்து ஒரு ஆதரவு குரல் தளபதி விஜய்க்காக ஒலித்துள்ளது.

ஃபயரா இருக்கு: விஜய்யின் ஜன நாயகன் டிரைலர் ஃபயராக உள்ளது. ஜன நாயகன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய விஜய் சாருக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தயாரிப்பு நிறுவனமான கேவிஎன், இயக்குநர் வினோத் மற்றும் அனிருத்துக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் என காந்தாரா ஹீரோ ரிஷப் ஷெட்டி சற்றுமுன் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

கோலிவுட் பிரபலங்கள் அமைதி: விஜய்யின் கடைசி படம் பக்கா ரீமேக் என ட்ரோல்கள் குவிந்து வரும் நிலையில், இத்தனை ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவாக வலம் வந்த விஜய்யின் கடைசி படத்துக்கு ஆதரவாக எந்தவொரு சக நடிகரோ, பிரபல நடிகர்களோ பாராட்டு தெரிவிக்காமல் மெளனம் காத்து வருவது ஏன் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

கன்னட தயாரிப்பு நிறுவனம்: விஜய்க்கு கோலிவுட்டில் இருந்து மட்டுமின்றி தென்னிந்தியாவிலேயே பெரிய ஆதரவு கிடைக்காத நிலையில், ரிஷப் ஷெட்டி ட்வீட் போட்டதை பார்த்த ரசிகர்கள் கன்னட தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் ரிஷப் ஷெட்டியிடம் கோரிக்கை வைத்து படத்தை பாராட்ட சொல்லியிருப்பார்கள் என்றும் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் காந்தாரா சாப்டர் 1 மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், தளபதி விஜய்க்காக ரிஷப் ஷெட்டி குரல் கொடுத்திருப்பதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். முன்னதாக சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்துக்கும் ரிஷப் ஷெட்டி பாராட்டி ட்வீட் போட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X