ஜனநாயக கடமையை ஆற்றிய ஜனநாயகன்.. கப்பை வெல்வாரா பிகிலு?.. மக்கள் ஆதரவு கிடைக்குமா?

சென்னை: இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகருக்கும் பாடகி ஷோபாவுக்கும் மகனாக பிறந்த விஜய் சிறு வயதிலேயே அப்பா இயக்கத்தில் நடிக்க ஆரம்பித்தார். நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமான விஜய் தனது கடைசி படமாக ஜன நாயகன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

தேர்தல் நாளான ஏப்ரல் 23ம் தேதி இன்று வரை ஜன நாயகன் படம் லீக் ஆன பிறகும் படத்திற்கான சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை. நாளை ஜன நாயகன் படத்துக்கு சென்சார் கிடைக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

Jana Nayagan Vijay done his democratic duty Will People give their full support to him

இந்நிலையில், சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது ஜன நாயக கடமையை ஆற்றியுள்ளார் ஜனநாயகன் பட ஹீரோவும் தவெக தலைவருமான விஜய்.

கப்பு முக்கியம் பிகிலு: அஜித் குமார், ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், சிவகுமார், சூர்யா என பல சினிமா பிரபலங்கள் காலையிலேயே தங்களது வாக்குச் சாவடிகளுக்குச் சென்று தங்கள் வாக்கினை செலுத்தியுள்ளனர். தவெக தலைவராக உருவெடுத்துள்ள விஜய் நீலாங்கரையில் உள்ள தனது வாக்குச் சாவடிக்குச் சென்று தனது ஜன நாயக கடமையை ஆற்றியுள்ளார்.

Jana Nayagan Vijay done his democratic duty Will People give their full support to him

முதல் முறையாக தேர்தலில் தவெக களம் கண்டுள்ள நிலையில், மக்கள் சப்போர்ட் உடன் வெற்றி பெறுவோம் என விஜய் தனது பிரச்சாரங்களின் போது உறுதியாக கூறி வந்தார். மக்கள் அவருக்காக வாக்கு செலுத்துவார்களா? அல்லது மாற்றம் வேண்டாம் திமுக ஆட்சியே நல்லா இருக்கு என ஓட்டுப் போடுவார்களா? என்பது மே 4ம் தேதி தெரிந்து விடும். பிகிலுக்கு கப்பு கிடைக்குமா? கிடைக்காதா? என்பதும். விஜய்க்கு ஆதரவாக அவரது பெற்றோர்களான எஸ்.ஏ. சந்திரசேகரும், ஷோபா சந்திரசேகரும் வாக்களித்துள்ளனர்.

தில்லான கில்லி: எத்தனை தடைகள் வந்தாலும் அரசியலில் எந்த காரணம் கொண்டும் பின் வாங்காமல் கட்சியை ஆரம்பித்து, மாநாடுகளை நடத்தி, கரூர் சம்பவத்துக்குப் பிறகு மனமுடைந்து போனாலும் மீண்டும் எழுந்து வந்து ஒவ்வொரு ஊரிலும் மக்களை சந்தித்து பெரும் படையை திரட்டிக் காட்டி தான் ஒரு தில்லான கில்லி என்பதை விஜய் நிரூபித்துள்ளார். இன்று நடைபெற உள்ள தேர்தலில் 90 சதவீதத்துக்கும் மேல் மக்கள் ஓட்டுப் போட்டாலே விஜய்க்காக வாக்களிக்கவே வாக்குச்சாவடிக்கு சென்றுள்ளனர் என கருத்தில் கொள்ளலாம் என தவெகவினரும் தளபதி ரசிகர்களும் கூறி வருகின்றனர். இன்றைய வாக்குப்பதிவு சதவீதம் மற்றும் மே 4ம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுகள் விஜய்யின் ரியல் பலத்தை காட்டிவிடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X