ஜாலி மூடில் ஜனநாயகன் விஜய்.. தவெக தலைவர் செம ஹேப்பி போல.. ரசிகர்களுக்கு நல்ல சேதி கிடைக்குமா?

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் தனது மூன்றாம் ஆண்டை தொடங்கியுள்ள நிலையில், அதன் நிகழ்ச்சி இன்று பனையூரில் நடைபெற்றது. "பாம்பு வந்து கடிக்கையில் பாலும் உயிர் துடிக்கையில் யார் முகத்தில் பொங்கி வரும் சிரிப்பு" என்கிற வரிகள் தான் நினைவுக்கு வருகிறது. விஜய்யை நம்பி இதுவரை பெரிதாக எந்தவொரு கட்சியும் கூட்டணிக்கு வரவில்லை.

மேலும், ஜனநாயகன் ரிலீஸ் சிக்கல் நீடித்து வருகிறது. நாளை கரூர் கூட்டநெரிசல் பலி தொடர்பான வழக்கு விசாரணைக்கு வருகிறது. ஆனால், ஜனநாயகனோ இன்று செம ஜாலி மூடில் இருக்கிறாரே என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Jana Nayagan Vijay totally in a jolly mood today at the TVK stepping into the 3rd year

தமிழக வெற்றிக் கழகம் தனது மூன்றாம் ஆண்டை தொடங்கியுள்ள நிலையில், அதன் தலைவர் விஜய் தனது அரசியல் செயல்பாடு குறித்துப் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். அவர் பொதுவெளியில் அதிகம் தலைகாட்டுவதில்லை, பனையூரில் இருந்தே அரசியல் செயல்படுத்துகிறார் என்ற விமர்சனங்கள் நீண்டகாலமாகவே முன்வைக்கப்படுகின்றன.

விஜய்க்கு எதிரான விமர்சனங்கள்: முக்கியப் பிரச்சினைகள் குறித்து விஜய் கருத்து தெரிவிப்பதில்லை என்ற விமர்சனமும் வலுத்துள்ளது. மக்கள் சந்திப்புகளுக்குப் பிறகு வீட்டுக்குள்ளேயே முடங்குவது போன்ற குற்றச்சாட்டுகளையும் அவர் எதிர்கொள்கிறார். சமீபத்திய பட்ஜெட் அல்லது திருப்பரங்குன்றம் விவகாரம் எதிலும் அவரிடமிருந்தோ, தவெக தரப்பிலிருந்தோ கருத்து வெளியாகவில்லை.

அ.தி.மு.க. ஐ.டி. விங் அண்மையில், விஜய்யைப் 'பனையூர் பண்ணையார்' என்று கடுமையாக விமர்சித்திருந்தது. இப்படியான விமர்சனங்களுக்கும், "நான் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை" என்ற குற்றாட்டிற்கும் விஜய் பதிலளிப்பார் எனத் தவெக விழாவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தமது மீதான விமர்சனங்களுக்குப் பதிலளிப்பதாகக் கருதி, விஜய் பேசிய வார்த்தைகள் அவரைத் 'தன்னைத்தானே கேலி செய்துகொள்வதாக' அரசியல் நோக்கர்களால் பார்க்கப்படுகிறது. வாக்குப்பதிவு நாளன்று ஒவ்வொரு வீட்டிலிருந்தும் விஜய் வருவார் என்று அவர் மழுப்பலாகக் குறிப்பிட்டார்.

வீட்டை விட்டு வெளியே வா விஜய்: பனையூரில் நடைபெற்ற இவ்விழாவில் விஜய் பேசியதாவது: "ஏய் விஜய் வீட்டை விட்டு வெளியே வா.. வீட்டை விட்டு வெளியே வா.. என ஒவ்வொருவரும் இப்படியெல்லாம் கேட்கும் போது எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், ஒவ்வொரு வீட்டுல இருக்கிற விஜய்யையும் இவர்கள் கூப்பிடுவது போல இருக்கிறது. பொறுங்க பாஸ்.. வருவாங்க.. முறையா வருவாங்க.. தேர்தல் அன்னைக்கு ஒவ்வொருத்தரும் வெளியே வருவாங்க வோட்டர் ஐடியை கையில் வைத்துக்கொண்டு.. ஒவ்வொரு வீட்டுல இருக்க ஒவ்வொரு விஜய்யும் காலையிலேயே பூத்தில் வந்து நிற்பாங்க பாருங்க.. அன்னைக்கு தெரியும்.. ஏன்டா இந்த விஜய்யை கூப்பிட்டோம் என்று.." என செம நக்கலாக பேசியுள்ளார்.

ஜாலி மூடில் ஜனநாயகன்: பாடகர் வேல்முருகனை அழைத்து பாட்டுப் பாடச் சொல்லி டான்ஸ் எல்லாம் ஆடிய தவெக தலைவர் விஜய், பேசும் போது கூட தனக்கு எதிராக திரும்பிய விமர்சனங்களை ஜாலியாக எதிர்கொண்டு பேசுவதை போல பேசி வருகிறார். விஜய் ஜாலியாகத்தான் இருக்கிறார் என்றும் சிபிஐ விசாரணை, ஜனநாயகன் ரிலீஸ் பிரச்சனை உள்ளிட்டவை சீக்கிரமே நல்ல தீர்வை காணுமா என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். இந்த பிப்ரவரி மாதம் ஜனநாயகன் வெளியானால் தியேட்டர் ஓனர்களும் தமிழ் சினிமா ரசிகர்களும் சந்தோஷமடைவார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X