விஜய் Vs சிவகார்த்திகேயன்.. ஜனநாயகனுக்கு போட்டி பராசக்தி?.. எஸ்கே மீது டார்கெட்.. சதியை முறியடிப்பாரா?
சென்னை: ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் படம் ஜனவரி ஒன்பதாம் தேதியும்; சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் பராசக்தி திரைப்படம் ஜனவரி 14ஆம் தேதியும் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் கடந்த சில நாட்களாக பராசக்தி படமும் ஜனவரி 9ஆம் தேதிதான் வருகிறது; விஜய்யுடன் வேண்டுமென்றே சிவா போட்டிப்போடுகிறார் என்ற பேச்சுக்கள் எழ ஆரம்பித்திருக்கின்றன.
சிவகார்த்திகேயனை சினிமாவுக்கு அழைத்து வந்தது தனுஷ் என்பது அனைவரும் அறிந்ததுதான். ஹீரோவாக நடித்து தனது திறமையை காண்பித்து உயர்ந்த அவர்; வளர்ந்த பிறகு தனுஷை எதிர்க்கிறார் என்று குரல்கள் கேட்டன. அதற்கு ஆரம்பத்தில் ரியாக்ட் செய்துகொண்டிருந்த சிவா காலப்போக்கில் அதுகுறித்து பெரிதாக எதையும் கண்டுகொள்வதில்லை. அந்த விஷயத்துக்கு பிறகு மீண்டும் அவரை சுற்றி அதேபோன்ற பேச்சுக்கள் எழ ஆரம்பித்திருக்கின்றன.
என்ன ஆனது?: அதாவது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த GOAT திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் கெஸ்ட் ரோல் செய்திருந்தார். அவர் வரும் சீனில் அவரிடம் விஜய் துப்பாக்கியை கொடுத்ததை அடுத்து; சிவாதான் அடுத்த விஜய் என்று பலரும் சொன்னார்கள். ஆனால் அவரோ விஜய் என்றால் அது ஒரு விஜய்தான் என கூறினார். ஆனால் தொடர்ந்து விஜய்யின் இடத்தை சிவகார்த்திகேயன் பிடிக்க நினைக்கிறார் என்று ஒருதரப்பினர் சொல்லிக்கொண்டே செல்கிறார்கள்.

சிவா சொல்வது என்ன?: ஆனால் தான் விஜய்க்கு போட்டியில்லை; எப்போதுமே போட்டியிட முடியாது என்பது சிவாவுக்கும் தெரியும். அதை அவர் உணர்ந்தே இருக்கிறார். அவரிடம் நெருக்கமாக இருக்கும் சூரிகூட சில நாட்களுக்கு முன்பு இதே போன்ற கருத்தைத்தான் பூடகமாக தெரிவித்திருந்தார். நிலைமை இப்படி இருக்க கடந்த சில நாட்களாக இன்னொரு தகவலும் சோஷியல் மீடியாவில் வட்டமடிக்க தொடங்கியிருக்கின்றன.
ஜனநாயகன் Vs பராசக்தி?: முதலில் ஜனநாயகன் ரிலீஸுக்கு பிறகு பராசக்தி ரிலீஸை பிளான் செய்திருந்தார்கள்; ஆனால் விஜய்யுடன் போட்டிப்போட்டு அடுத்த விஜய் தான்தான் என்பதை நிரூபிக்க சிவா முடிவு செய்து ஜனநாயகனுக்கு போட்டியாக பராசக்தியை இறக்க தயாரிப்பு நிறுவனத்துக்கு நெருக்கடி தருகிறார் என்பதுதான் அது. உண்மையில் ஆழ்ந்து பார்த்தால் சிவகார்த்திகேயன் இப்படி சொல்வதற்கான எந்த வாய்ப்பும் இல்லை என்றே தோன்றுகிறது. தன்னுடைய உயரம் என்னவென்பதை அறிந்தவர் அவர். அதனால்தான் இவ்வளவு தூரம் அவர் உயர்ந்திருக்கிறார்.

பிறகு என்ன காரணம்?: அப்படியிருக்கையில் இதில் வேண்டுமென்றே சிவகார்த்திகேயனை கோர்த்துவிடுகிறார்கள் என்றுதான் அவரது ரசிகர்கள் நினைக்கிறார்கள். எஸ்கேவின் வளர்ச்சியை தொடர்ந்து ஒரு கும்பல் அவதூறு பரப்பி தடுக்கலாம் என்றுதான் பார்க்கிறது. முதலில் இமான் விஷயத்தை கையில் எடுத்தார்கள். அது நீர்த்துப்போனது. இப்போது விஜய் சினிமாவை விட்டு விலகும் சூழலில்; தன்னியல்பாக அவரது ரசிகர்கள் விஜய் போன்றே தன்னுடைய சினிமாக்களின் ஃபார்முலாவை வகுத்திருக்கும் சிவாவைத்தான் எதிர்காலத்தில் ரசிக்க செய்வார்கள்.
பக்கா பிளான்: அப்போது சிவகார்த்திகேயனுக்கான ரசிகர் பலமும், வியாபார பலமும் இன்னமும் உயரும். இப்போது விஜய்யின் கடைசி படத்துக்கு போட்டியாக பராசக்தியை எஸ்கே இறக்குகிறார் என்று பரப்பினால்; விஜய் ரசிகர்களுடைய கோபத்தை அவர் மீது காட்ட வைக்கலாம்; அதன் மூலம் எதிர்காலத்தில் சிவாவுக்கு உருவாகும் ரசிகர் பலத்தை குறைத்துவிடலாம் என்ற பிளானோடு செயல்படுகிறார்கள் என்பது சிவா ரசிகர்களின் எண்ணமாக இருக்கிறது.
அரசியலும் காரணம்?: அதுமட்டுமின்றி பராசக்தி படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம்தான் வெளியிடுகிறது. ஒருவேளை தவிர்க்க முடியாத காரணங்களால் ஜனநாயகனோடு பராசக்தி வெளியாகும் சூழ்நிலை வந்தாலும்; அரசியலில் விஜய் இருப்பதால் அவரை பழி வாங்க வேண்டுமென்றே திமுக தரப்பு ரிலீஸ் செய்கிறது என்ற பிம்பத்தையும், எஸ்கேவும் ஆளும் தரப்பு என்ன சொன்னாலும் கேட்கும் மைண்ட் செட்டில்தான் இருக்கிறார் என்ற பிம்பத்தையும் உருவாக்கலாம் என்ற திட்டத்தோடு செயல்படுகிறார்கள் என்றே திரைத்துறை ஆர்வலர்கள் கருதுகிறார்கள்.
அஜித் ஒருமுறை தன்னை பார்த்து, உங்கள் வெற்றியை பார்த்து பயப்படுகிறார்கள் என்றால் நீங்கள் பிக் லீக்கில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம் என சொன்னதாக சொன்னார். உண்மையில் எஸ்கேவின் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் அவரை விஜய் இடத்துக்கோ அல்லது அவரது ரசிகர்களிடமோ எதிர்காலத்தில் நெருங்கவிடக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்வதை உணர முடிகிறது. சதிகளை முறியடிப்பாரா சிவகார்த்திகேயன்.. பொறுத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











