நம்பிக்கையுடன் இருக்கும் விஜய்.. ஜன நாயகன் படத்துக்கு இன்று சென்சார் கிடைக்குமா?
சென்னை: சிபிஐ வழக்கு விசாரணைக்குப் பிறகு நடிகரும் தவெக தலைவருமான விஜய் அமைதியாகி விடுவார் என பல்வேறு கட்சிகளும் தரப்பினரும் எதிர்பார்த்த நிலையில், விஜய் தொடர்ந்து வெளியே முழு நம்பிக்கையுடன் காட்சியளித்து வருவது அவரது ரசிகர்களையும், தொண்டர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த வாரமே ஜன நாயகன் படத்தை பார்த்துவிட்டு சென்சார் வழங்கியிருந்தால், இந்நேரம் இந்த வாரமே துரந்தர் 2 படத்துக்குப் போட்டியாக ஜன நாயகன் படம் வெளியாகியிருக்கும் எனக் கூறப்பட்ட நிலையில், இன்று கண்டிப்பாக மறுதணிக்கை குழு படத்தை பார்த்து சென்சார் வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சட்ட ரீதியாகவும் சமாதான ரீதியாகவும் தொடர்ந்து விஜய் தரப்பு போராடி வரும் நிலையில், ஜன நாயகன் படத்திற்கு சென்சார் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், சென்சார் கிடைத்தால் கூட மே 4ம் தேதி வரை படம் வெளியாக வாய்ப்பில்லை என்றே கூறுகின்றனர்.
ஜனநாயகன் சென்சார்: கேவிஎன் தயாரிப்பில் எச். வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள ஜன நாயகன் திரைப்படம் சென்சார் கிடைக்காத நிலையில், இன்னமும் தியேட்டரில் வெளியாகவில்லை. மற்ற நடிகர்கள் மாதிரி ஓடிடியில் தனது படத்தை விடப்போவதில்லை என்கிற உறுதியுடன் கண்டிப்பாக கடைசி படத்தை தியேட்டரில் தான் முதலில் ரிலீஸ் செய்வேன் என விஜய் உறுதியாக உள்ளார். இந்நிலையில், இன்று மதியன் மறு தணிக்கை குழு படத்தை பார்த்துவிட்டு சில கரெக்ஷன்களை சொல்லி படத்தை ரிலீஸ் செய்ய ஏதுவாக சென்சார் சான்றிதழ் வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நம்பிக்கையுடன் விஜய்: நடிகரும் தவெக தலைவருமான விஜய் செம கான்ஃபிடன்ஸ் உடன் உள்ளார் என்பது நேற்று அவர் தவெக ஐடி விங் நிர்வாகிகளை சந்திக்க வெளியே வந்ததை பார்த்தாலே தெரிகிறது. வெற்றியோ, தோல்வியோ கடைசி வரை மக்களுடன் நின்றே தனது முதல் தேர்தலை விஜய் சந்திக்கப் போகிறார் என்பதும் உறுதியாகி உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் செல்லப் போவதில்லை என்றும் கண்டிப்பாக தனது மக்கள் பலத்தை வரும் தேர்தலில் அவர் நிரூபிப்பார் என அவரது ரசிகர்களும் தொண்டர்களும் நம்பிக்கையுடன் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











