'அம்மா' ஒரு ஃபைட்டர், ஃபோர்ஸா திரும்பி வருவார்: நடிகர் ஸ்ரீகாந்த்
சென்னை: ஜெயலலிதா போராடி வெற்றி பெற்று சிறையில் இருந்து வெளயே வருவார் என நடிகர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து தமிழ் திரை உலகினர் சென்னை சேப்பாக்கத்தில் இன்று உண்ணாவிரதம் இருந்தனர்.
உண்ணாவிரப் போராட்டத்தில் கலந்து கொண்ட நடிகர் ஸ்ரீகாந்த் கூறுகையில்,

தமிழகமே
தமிழகமே ஜெயலலிதா திரும்பி வருவதை தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

அனுதாபம்
ஜெயலலிதா மீது வைத்துள்ள மதிப்பு மற்றும் அனுதாபத்தால் தான் போராட்டம் நடைபெற்று வருகிறது. இது அமைதியான வழியில் நடக்கும் போராட்டம்.

ஆதரவு
ஜெயலலிதாவுக்கு நாங்கள் இருக்கிறோம் என்பதை தெரிவிக்கவே திரை உலகினர் ஒன்று கூடியுள்ளோம்.

ஃபைட்டர்
ஜெயலலிதா போராட்ட குணம் கொண்டவர். அவர் சட்டப் போராடி நிச்சயம் வெளியே வருவார். சட்டத்தை மதித்து நடப்பவர் ஜெயலலிதா.

கலைக்குடும்பம்
ஜெயலலிதா எங்கள் கலைக்குடும்பத்தில் இருந்து அரசியலுக்கு சென்றவர். அவருக்காக குடும்பத்தார் ஒன்று கூடி போராடுகிறோம் என்றார் ஸ்ரீகாந்த்.


Click it and Unblock the Notifications











