Don't Miss!
- Technology UPI கெடு முடிந்தது.. Paytm யூசர்கள் உடனே இதை பண்ணுங்க.. NPCI கொடுத்த அப்ரூவல்.. இனி எஸ்பிஐ, எச்டிஎப்சிதான்!
- Sports உனக்காக நான் இருக்கேன் நண்பா! 34 பந்தில் அரைசதம் அடித்த சூர்யகுமார்..ஹர்திக்கிற்கு கொடுத்த ரியாக்சன்
- Automobiles இந்த காரோட உடல் ரொம்ப நீளமா இருக்கும்! டெரிடரி பேருக்கு பதிவு செய்த ஃபோர்டு.. பெரிய சம்பவம் நடக்கபோகுது!
- News சென்னை பயணிகள் கவனத்துக்கு.. நாளை மெட்ரோ ரயில் நேரத்தில் மாற்றம்.. தேர்தலையொட்டி மேஜர் அறிவிப்பு
- Finance தீபக் பாரேக் திடீர் ராஜினாமா.. ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்ஷூரன்ஸ் அறிவிப்பு..!!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஜெ. கைது: இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்த ரசிகர்களால் 'செம டென்ஷனில்' விஜய்
சென்னை: ஜெயலலிதாவுக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை கிடைத்ததை இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாடிய ரசிகர்களால் விஜய் டென்ஷனில் உள்ளாராம்.
ஏற்கனவே விஜய் நடித்த தலைவா படத்தை ரிலீஸ் செய்ய படாதபாடு பட்டார்கள். இந்நிலையில் அவர் தற்போது நடித்துள்ள கத்தி படத்திற்கு தயாரிப்பாளர் உருவத்தில் பெரும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் கத்தி படத்தின் சேட்டிலைட் உரிமத்தை வாங்க ஜெயா டிவி முன் வந்தது. ஆளுங்கட்சி டிவியிடம் படம் செல்வதால் பிரச்சனை இன்றி ரிலீஸாகும் என்று நிம்மதியாக இருந்தார்கள்.
இந்நிலையில் தான் அவர்களின் நிம்மதி கெடும் வகையில் அந்த தகவல் வெளியானது.
ஜெயா டிவி
கத்தி படத்தின் சேட்டிலைட் உரிமத்தை வாங்கும் முடிவை தள்ளிப் போட்டு வைத்துள்ளது ஜெயா டிவி என்று செய்திகள் வெளியாகின.
கொண்டாட்டம்
இத்தனை பிரச்சனை இருக்கையில் விஜய் ரசிகர்கள் ஜெயலலிதாவுக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை கிடைத்ததை இனிப்பு கொடுத்தும், பட்டாசுகள் வழங்கியும் கொண்டாடியுள்ளனர்.
தமிழ் அமைப்புகள்
இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு நெருக்கமான ஒருவர் தயாரித்த கத்தி படத்தை ரிலீஸ் செய்யவிட மாட்டோம் என்று சில தமிழ் அமைப்புகள் வரிந்து கட்டிக் கொண்டு நிற்கின்றன. இந்நிலையில் விஜய் ரசிகர்கள் ஜெயலலிதாவுக்கு தண்டனை கிடைத்ததை கொண்டாடியுள்ளனர்.
விஜய்
ஜெயலலிதாவுக்கு தண்டனை கிடைத்ததை தனது ரசிகர்கள் மகிழ்ச்சியாக கொண்டாடியது விஜய்க்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லையாம்.
டென்ஷன்
பட்டாசு வெடித்து கொண்டாடியதோடு மட்டும் அல்லாமல் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு குறித்து யாரும் விவாதிக்க வேண்டாம் என விஜய் தனது ரசிகர்களை கேட்டுக் கொண்டது போன்று யாரோ ஃபேஸ்புக்கில் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதனால் விஜய் செம டென்ஷனில் உள்ளாராம்.