'ஒருநாளும் அடங்காத என் மனைவியை அடக்கிவிட்டேன்'... ஜெயம் ரவி சொன்ன உண்மை கதை!

சென்னை : தனது மனைவி தனக்கு அடங்கி நடந்த கதையை கூறி, அடங்க மறு வெற்றி விழாவை நடிகர் ஜெயம் ரவி கலகலப்பாக்கினார்.

ஜெயம் ரவி நடிப்பில் கார்த்திக் தங்கவேல் இயக்கிய அடங்க மறு படம் கடந்த மாதம் 21ம் தேதி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்துடன் வெளியான மற்ற படங்களைவிட அடங்க மறு படம் அதிக வசூலை பெற்றுள்ளது.

இதனை கொண்டாடும் வகையில் அடங்க மறு படத்தின் வெற்றி விழா சென்னையில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் ஜெயம் ரவி, அவரது மனைவி ஆர்த்தி, நடிகை ராஷி கண்ணா, அழகம் பெருமாள், முனிஸ்காந்த், மைம் கோபி, இயக்குனர் கார்த்திக் தங்கவேல், இசையமைப்பாளர் சாம் சிஎஸ், எடிட்டர் ரூபன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இவ்விழாவில் பேசிய நடிகர் ஜெயம் ரவி, படத்துக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். மேலும் இந்த படத்தின் போது தனது மனைவி ஆர்த்தி தனக்கு அடங்கி நடந்ததாகக் கூறினார்.

இதுகுறித்து அவர் பேசியதாவது

இயக்குனர் தான் காரணம்

இயக்குனர் தான் காரணம்

" அடங்க மறு படத்தின் வெற்றிக்கு இயக்குனர் கார்த்திக் தங்கவேல் தான் முக்கிய காரணம். இந்த படத்துக்கு அவர் அமைத்த திரைக்கதை தான் மிக சுவாரஸ்யமாக அமைந்தது.

அடங்கி நடந்த மனைவி

அடங்கி நடந்த மனைவி

இந்த படத்தின் படப்பிடிப்பு போது மட்டும் தான் எனது மனைவி ஆர்த்தி எனக்கு அடங்கி நடந்தார். படத்தின் பெயர் அடங்க மறு என்றாலும் அவர் அடங்கி நடந்தது ஆச்சர்யம் தான்.

அம்மா தான் தயாரிப்பாளர்

அம்மா தான் தயாரிப்பாளர்

ஏனென்றால் படத்திற்கு அவரது அம்மா தான் தயாரிப்பாளர். வீட்டில் ஏதாவது சண்டை வந்தால், உடனடியாக படிப்பிடிப்புக்கு போக முடியாது என கூறிவிடுவேன். வேறு வழியே இல்லாமல் அடங்கி போய்விடுவார்.

அம்மாவுக்கு போன்

அம்மாவுக்கு போன்

அப்படியும் எப்போதாவது கடும் கோபம் வரும் போது, அவரது அம்மாவுக்கு போன் செய்து நாளை ஒருநாளைக்கு மட்டும் படப்பிடிப்பை ரத்து செய்யுங்கள், ஒரே ஒரு சண்டை போட்டுக்கொள்கிறேன் என கேட்பார். ஆனால் நிறைய நடிகர்கள் நடிப்பதால் அது சாத்தியப்படாது. இதனால் வேறு வழியே இல்லாமல் அமைதியாகி விடுவார்.

மீண்டும் ஒரு படம்

மீண்டும் ஒரு படம்

கார்த்திக் தங்கவேலுடன் மீண்டும் ஒரு படத்தில் இணைய விரும்புகிறேன். விரைவில் அது நடக்கும் என நம்புகிறேன்", என ஜெயம் ரவி கலகலப்பாக பேசினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X