2வது முறையாக தந்தை ஆன ஜெயம் ரவி: மீண்டும் ஆண் குழந்தை
சென்னை: ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி மீண்டும் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
ஜெயம் ரவி ஆர்த்தி என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஆரவ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் ஆர்த்தி இரண்டாவது முறையாக கர்ப்பம் ஆனார். பிரசவ வலி எடுத்த உடன் ஆர்த்தியை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது.

ஆர்த்தியும், குழந்தையும் நலமாக உள்ளனர். இரண்டாவது முறையாக தந்தையான ரவிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ரவி, த்ரிஷா நடித்துள்ள பூலோகம் விரைவில் ரிலீஸாக உள்ளது. இந்த படத்திற்காக ரவி குத்துச்சண்டை பயிற்சி எல்லாம் எடுத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ரவி தனி ஒருவன், ரோமியோ ஜூலியட் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
Comments


Click it and Unblock the Notifications