பப்ளிக் பிளேஸ்ல ஒட்டி உரசி.. ஆர்த்தியிடம் ஜெயம் ரவி பண்ண சேட்டை.. அவர் என்ன பண்ணாரு தெரியுமா?

சென்னை: யூடியூப் சேனல் நடத்திய விருது விழா நிகழ்ச்சியில் நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியுடன் கலந்து கொண்டார். அப்போது எந்த ஹீரோயின் பக்கத்திலும் அமராமல் தன் மனைவியின் பக்கத்திலேயே ஜெயம் ரவி அமர்ந்துக் கொண்டு செய்த க்யூட்டான சேட்டை காட்சிகள் வெளியாகி உள்ளன.

அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமான ரவி அந்த படத்திற்கு பிறகு ஜெயம் ரவி என்றே இன்று வரை அழைக்கப்பட்டு வருகிறார். தெலுங்கில் வெளியான பல சூப்பர் ஹிட் படங்களை அப்படியே அண்ணன் மோகன் ராஜா இயக்க அவரது தம்பி ஜெயம் ரவி தமிழில் அந்த படங்களில் நடித்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வந்தார்.

Jayam Ravi cute romantic ditches with his wife Aarti at cinema function makes fans happy


உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம் உள்ளிட்ட படங்கள் அதில் ரசிகர்களுக்கு அதிகம் பிடித்த படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், மழை படம் அந்தளவுக்கு தமிழில் ஹிட் கொடுக்கவில்லை. அதற்கு இன்னொரு காரணம் அந்த படத்தை மோகன் ராஜா இயக்கவில்லை என்றும் சொல்லலாம்.

டோலிவுட்டில் ரீமேக்: தெலுங்கு படங்களை தமிழில் ரீமேக் செய்து நடித்து வந்த ஜெயம் ரவி தனது அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் நடித்த தனி ஒருவன் படம் பிளாக்பஸ்டர் வெற்றிப் பெற்ற நிலையில், தெலுங்கில் அந்த படத்தை ராம்சரண் ரீமேக் செய்து நடித்தது குறிப்பிடத்தக்கது. தெலுங்கிலும் அந்த படம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.

பொன்னியின் செல்வன்: தனி ஒருவன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவிக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக கோமாளி அமைந்தது. அந்த படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கத்தில் மல்டி ஸ்டார் படமாக வெளியான பொன்னியின் செல்வன் படம் ஜெயம் ரவிக்கு 500 கோடி வசூல் படமாக பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. சியான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா துலிபாலா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், லால், பிரபு, விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் அந்த படத்தில் நடித்திருந்தனர்.

பப்ளிக் பிளேஸ்ல ஒட்டி உரசி: பிரபல யூடியூப் சேனல் நடத்திய சினிமா விருது விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியிடம் ஒட்டி உரசி உட்கார்ந்து இருந்தார். மேலும், அடிக்கடி அவரது கையை வைத்து ஆர்த்தியை கையை இடித்து குறும்புத்தனம் செய்து விளையாடிக் கொண்டே இருந்தார்.

Jayam Ravi cute romantic ditches with his wife Aarti at cinema function makes fans happy


கண்டித்த மனைவி: கணவர் பொதுவெளியில் இப்படி இம்சை பண்றாரே என நினைத்து செல்லமாக பப்ளிக் பிளேஸ் என ஜெயம் ரவி காதுக்கு மட்டும் கேட்பது போல பேசும் வீடியோ காட்சிகள் தற்போது தீயாக பரவி வருகிறது.

மாமியார் தயாரிப்பில்: ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தியின் அம்மா சுஜாதா விஜயகுமார் ஹோம் மூவி மேக்கர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். ஜெயம் ரவி நடித்த அடங்கமறு, பூமி மற்றும் சமீபத்தில் வெளியான சைரன் 108 உள்ளிட்ட பல படங்களையும் அவர் தான் தயாரித்துள்ளார். அடுத்து ஜெயம் ரவி அடங்கமறு பட இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் நடிக்க உள்ள படத்தையும் இவர் தான் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X