Vishal Health: விஷால் உடல்நிலை.. என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்.. எமோஷனலான ஜெயம் ரவி
சென்னை: மதகஜராஜா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த விஷாலை பார்த்து ஒட்டுமொத்த தமிழ் திரையுலகும் ஷாக் ஆனது. ஏனெனில் அவரது உடல்நிலை அப்படி இருந்தது. ஆனால் அவர் அந்த நிலைமையில் வந்ததற்கு அவருக்கு வைரல் காய்ச்சல்தான் என்று விஷாலின் மருத்துவர் கூறினார். இந்நிலையில் விஷாலின் உடல்நிலை குறித்து அவரது நெருங்கிய நண்பரும், நடிகருமான ஜெயம் ரவி எமோஷனலாக பேசியிருப்பது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறார்.
கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால். தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஆக்ஷன் ஹீரோவான அவர் கடைசியாக ரத்னம், மார்க் ஆண்டனி ஆகிய படங்களில் நடித்தார். அவற்றில் ரத்னம் சுமாரான வரவேற்பையும், மார்க் ஆண்டனி திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பையும் பெற்றது. அதிலும் மார்க் ஆண்டனி படம்தான் அவரது கரியரில் முதன்முறையாக நூறு கோடி ரூபாய் வசூலித்த முதல் படம் என்றும் சொல்லப்படுகிறது. அடுத்ததாக அந்தப் படத்தின் இரண்டாவது பாகத்திலும் நடிக்கிறார் அவர்.

மதகஜராஜா: இதற்கிடையே கடந்த 2012ஆம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் மதகஜராஜா படத்தில் நடித்தார் விஷால். அதில் அவருடன் சந்தானம், மணிவண்ணன், மனோபாலா, வரலட்சுமி, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இவர்களில் மணிவண்ணன், மனோபாலா ஆகியோர் இப்போது உயிருடன் இல்லை என்பது கவலைக்குரிய விஷயமாகும்.மதகஜராஜா படத்தின் ஷூட்டிங் திட்டமிட்டப்படி முடிந்துவிட்டாலும்; ப்ளான் செய்தபடி ரிலீஸ் செய்ய முடியவில்லை.
ரிலீஸாகும் MGR: கிட்டத்தட்ட 13 வருடங்கள் கழித்து படமானது நாளை ரிலீஸாகவிருக்கிறது. இதனால் விஷால் ரசிகர்களும், விஷாலும் உற்சாகத்தில் இருக்கிறார்கள். படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதும் விஷாலும் எமோஷனலாக தனது எக்ஸ் தளத்தில் மதகஜராஜா படத்தின் ரிலீஸ் குறித்து போஸ்ட் போட்டிருந்தார். மேலும் ரிலீஸ் தேதி வெளியானதும் படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் சூடுபிடித்தன. அந்தவகையில் சென்னையில் நடந்த ஒரு ப்ரோமோஷனில் படக்குழுவினருடன் விஷாலும் கலந்துகொண்டார்.
உச்சக்கட்ட ஷாக்: அந்த நிகழ்ச்சியில் விஷாலை பார்த்த பலரும் பெரும் ஷாக்கினார்கள். ஏனெனில் அவர் அந்த நிலைமையில் அந்நிகழ்ச்சிக்கு வந்தார். உடல் எடை குறைந்து கைகள் நடுக்கத்துடன் கலந்துகொண்ட அவரை கண்டு பலரும் பரிதாபப்பட்டனர். மேலும் சிலரோ விஷாலுக்கு ஏதோ பெரிய நோய் வந்துவிட்டதாக இஷ்டத்துக்கு பேச ஆரம்பித்தார்கள். ஆனால் அவருக்கு பெரிய நோய் எல்லாம் இல்லை வைரல் காய்ச்சல்தான் வந்திருக்கிறது என்று அவரது மருத்துவர் அறிக்கை வெளியிட்டார்.
ஜெயம் ரவி எமோஷனல்: இந்நிலையில் விஷால் குறித்து அவரது நெருங்கிய நண்பரும், நடிகருமான ஜெயம் ரவி பேசுகையில், “என்னுடைய நண்பர் விஷாலுக்கு இப்போது போதாத காலம் அல்லது கெட்ட நேரம் என்று எதை வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் விஷாலைவிட ஒரு தைரியசாலி யாருமே கிடையாது. அந்தத் தைரியம்தான் அவரை காப்பாற்றும். அவர் நிறைய பேருக்கு உதவி செய்திருக்கிறார். அவரது நல்ல மனதுக்கு அவர் சீக்கிரமே மறுபடியும் சிங்கம் மாதிரி வருவார்” என்றார்.


Click it and Unblock the Notifications











