எல்லாருமே இப்போ கோமாளி தான்.. கொரோனா கலவரத்தில் வைரலாகும் மீம்.. ஜெயம் ரவி எபிக் ரியாக்ஷன்!
சென்னை: கோமாளி படத்தில் வரும் ஆரம்ப காட்சி, இந்த கொரோனா நேரத்திற்கு சரியாக பொருந்தும் வகையில் மீம் ஆகியுள்ளது.
Recommended Video
கொரோனா வைரஸை முன்னதாக ஹாலிவுட் படமான Contagion கணித்ததாக தற்போது அந்த படத்திற்கு செம மவுசு எகிறி உள்ள நிலையில், கோமாளி படத்தில் வந்த இந்த வசனமும் இந்த குவாரண்டின் நிலைக்கு அப்படியே பொருந்தி போகிறது.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் கோமாளி மீம் கடைசியாக அந்த படத்தின் ஹீரோ ஜெயம் ரவியின் கண்ணிலும் பட்டுள்ளது.

கோமாளி
பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு, கே.எஸ். ரவிக்குமார் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான கோமாளி திரைப்படம் நடிகர் ஜெயம் ரவிக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. அந்த படத்தில் 16 ஆண்டுகள் கழித்து கோமாவில் இருந்து எழும் நாயகனாக ஜெயம் ரவி அசத்தி இருப்பார்.
யார ஏமாத்த பார்க்குற
கோமாளி படத்தின் ஆரம்ப காட்சியில் வருவது போல, இது என்ன ஆண்டு என்ற கேள்விக்கு, 2020ம் ஆண்டு என்ற பதிலை யோகி பாபு கூறுவது போன்றும், அதற்கு ஜெயம் ரவி, யார ஏமாத்த பார்க்குற, டிவில சித்தி, மெட்டி ஒலி, சக்திமான், லொள்ளு சபா எல்லாம் ஒளிபரப்பாகுதுன்னு செம டைமிங்கான மீம் ஒன்று இந்த குவாரண்டின் நேர கலவரத்திலும் ரசிக்கும் படியாக அமைந்துள்ளது.

எபிக் ரியாக்ஷன்
தனது கோமாளி படத்தின் நிலைமை இப்போ ஒட்டுமொத்த உலகுக்கே வந்துவிட்டதே என்பதை நினைத்து, பழைய டிவி சீரியல்களை பார்க்கும் நிலைமைக்கு இந்த கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த மக்களையும் கோமாளிகள் ஆக்கி விட்டதே என நினைத்து, பல்லைக் கடித்த படி இருக்கும் எமோஜியை போட்டு எபிக் ரியாக்ஷனை கொடுத்துள்ளார்.
டைமிங் ஜோக்
கோமாளி படத்தில் வந்த இந்த காட்சி, இன்றைய சூழலுக்கு ஏற்ற வகையில் காமெடி மீமாக வலம் வந்து வைரலாகி வருகிறது. நடிகர் ஜெயம் ரவியே அந்த மீமுக்கு ரெஸ்பான்ஸ் கொடுத்துள்ள நிலையில், அவரது ரசிகர்கள், சூப்பர் டைமிங் ஜோக்.. நாமெல்லாம் கடந்த நூற்றாண்டில் வாழ்வது போன்ற ஃபீலிங் தான் இருக்கு.. ராமாயணம் எல்லாம் பார்ப்போமுன்னு நினைச்சு பார்க்கல என இந்த ரசிகர் கமெண்ட் செய்துள்ளார்.

எப்போ வரும்
கோமாளி படத்திற்கு பிறகு நடிகர் ஜெயம் ரவிக்கு அடுத்தடுத்து பெரிய படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்துள்ளன. மே 1ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட பூமி படம் கொரோனாவால் தள்ளிப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், மணிரத்னத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்தின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











