மனைவியுடன் விவாகரத்து.. மும்பையில் செட்டில் ஆனது ஏன்?.. முதன்முறையாக மனம் திறந்த ஜெயம் ரவி
சென்னை: ஜெயம் ரவி நடிப்பில் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் பிரதர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 31ஆம் தேதி படம் ரிலீஸாகவிருக்கிறது. இதனையொட்டி படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் மும்முரமாக இருக்கிறார் ரவி. இதற்கிடையே தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்தும் செய்துவிட்டார்.மேலும் மும்பையில் அவர் செட்டில் ஆகிவிட்டார் என்றும் ஒரு பேச்சு ஓடியது. இந்நிலையில் அதுகுறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார் அவர்.
ஜெயம் ரவி கடந்த மாதத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டு தனது மனைவியை பிரிவதாக தெரிவித்தார். அதனையடுத்து ஆர்த்தி விளக்கம் கொடுத்தார். ரவி தனது முடிவை மறு பரிசீலனை செய்வாரா என்று ரசிகர்கள் காத்திருக்க; அவரோ நீதிமன்றத்தில் விவாகரத்து மனுவையும் தாக்கல் செய்துவிட்டார். இதனால் தான் எடுத்த முடிவில் ஸ்ட்ராங்காக இருப்பது உறுதியானது. அதேசமயம் ரவிக்கும், ஆர்த்திக்கும் பழக்கம் ஏற்பட குஷ்பூதான் காரணம்; எனவே அவர் இருவருக்கும் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

மும்பையில் செட்டில்: ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இதற்கிடையே ரவி மும்பையில் செட்டில் ஆகிவிட்டார் என்றும்; பாலிவுட்டில் நடிப்பதற்கு முடிவு செய்து முயற்சித்துவருவதாகவும் கூறப்பட்டது. சூழல் இப்படி இருக்க ராஜேஷ் இயக்கத்தில் அவர் பிரதர் படத்தில் நடித்திருக்கிறார். அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு படம் வெளியாகிறது. அன்றைய தினம்தான் சிவகார்த்திகேயனின் அமரன் படமும் ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையி பிரதர் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் மும்முரமாக இ ருக்கும் ரவி சமீபத்தில் அளித்த பேட்டியில் பல விஷயங்களை பேசியிருக்கிறார்.
ஜெயம் ரவி பேட்டி: அவர் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “பாலிவுட் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் முன்னரே எனக்கு கொஞ்சம் வந்திருக்கின்றன. எனக்கு வந்தது எல்லாம் டபுள் ஹீரோ சப்ஜெட்டாக வந்திருந்தன. எனது கதாபாத்திரம் பிடிக்காததால் அவைகளில் நடிக்காமல் தவிர்த்துவிட்டேன். முக்கியமாக தமிழில் நாம் நல்ல நிலையில்தானே இருக்கிறோம். பிறகு ஏன் பாலிவுட் என்றும்; அங்கு சென்று இரண்டாவது ஹீரோவாக நடிக்க வேண்டுமா என்றும் நினைத்தேன்.
அது எக்ஸ்ட்ராதான்: இப்போது பாலிவுட்டில் நடிக்க முடிவு செய்திருக்கிறேன். அதுவுமே தமிழ் படங்களை முழுவதுமாக விட்டுவிட்டு போகவில்லை. பாலிவுட்டில் நடிப்பது எக்ஸ்ட்ராதான். தமிழ் படங்களுடன் சேர்ந்து ஹிந்தியிலும் நடிக்க முடிவு செய்துவிட்டேன்.அதற்கான முயற்சிகள் போய்க்கொண்டிருக்கின்றன. முன்பு வந்த வாய்ப்புகளை ஏற்க மறுத்துவிட்டேன். தற்ஓது அந்தனை பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறேன். அங்கே வேலை செய்ய வேண்டும் மும்பையில் செட்டிலாகித்தான் ஆக வேண்டும்" என்றார்.
கெனிஷாவுடன் தொடர்பு: முன்னதாக தனது மனைவியை ஜெயம் ரவி பிரிந்ததற்கு காரணமே பாடகி கெனிஷாவுடன் அவருக்கு இருக்கும் தொடர்புதான் என்று சொல்லப்பட்டது. அதனை ரவியும், கெனிஷாவும் திட்டவட்டமாக மறுத்தார்கள்.முக்கியமாக எனது வாழ்க்கையில் இன்னொரு பெண்ணை இழுக்காதீர்கள். கெனிஷா நிறைய பேருக்கு உதவியிருக்கிறார். நானும் அவரும் சேர்ந்து ஒரு ஆன்மீக மையத்தை திறப்பதற்கு திட்டமிட்டிருக்கிறோம். அதனை யாரும் கெடுத்துவிடாதீர்கள் என்று ரவி கூறியிருந்தார்.


Click it and Unblock the Notifications











