இந்த ஆசை ஏன் இப்போ வருதுனு தெரியல?.. மனம் திறந்த ஜெயம் ரவி.. ஆசை நிறைவேறுமா?

சென்னை: ஜெயம் ரவி இப்போது பிரதர் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. சூழல் இப்படி இருக்க தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்திருக்கிறார் ரவி. அந்த விவகாரம் ஹாட் டாபிக்காக ஓடிக்கொண்டிருக்கிறது. அதுகுறித்து தெளிவான விளக்கத்தையும் கொடுத்துவிட்டார் அவர். இந்தச் சூழலில் ரவி கொடுத்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக சைரன் திரைப்படம் வெளியானது. அந்தப் படம் சுமாரான வரவேற்பை பெற்றது. அதேசமயம் ரவியின் நடிப்புக்கு லைக்ஸ் விழுந்தன. அப்படத்தை அவரது முன்னாள் மாமியார் சுஜாதா தயாரித்திருந்தார். இப்போது பிரதர் படத்தில் நடித்திருக்கும் ரவி. எம்.ராஜேஷ் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் பிரியங்கா மோகன், பூமிகா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். அக்கா - தம்பி இடையே இருக்கும் பாசத்தை அடிப்படையாக வைத்து இந்தப் படம் உருவாகியிருக்கிறது. விரைவில் ரிலீஸாகவிருக்கிறது.

jayam ravi aarthi brother

ஜெயம் ரவி பேட்டி: இந்தப் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் சூடுபிடித்திருக்கின்றன. அந்தவகையில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "பரிசோதனை முயற்சிக்கான படங்களின் கோட்டா முடிந்துவிட்டது. தற்போது அதுபோன்ற படங்களில் நடிக்கவில்லை. அந்த ஆர்வமும் எனக்கு இப்போ இல்லை. இனிமேல் வந்தாலும் வரலாம். இப்போது எனக்கு மாஸ் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசைதான் வந்திருக்கிறது. இந்த மாஸ் ஆசை இப்போது வந்திருப்பது ஏன் என் தெரியவில்லை. அதற்கான வேலைகள் போகின்றன" என்றார்.

வெற்றிமாறனுடன் ரவி: சூழல் இப்படி இருக்க வெற்றிமாறனுடன் ஜெயம் ரவி இணையவிருப்பதாக சில நாட்களாக ஒரு தகவல் ஓடுகிறது. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கிறாரா இல்லை அவரது கதையில் நடிக்கிறாரா என்பது இன்னமும் உறுதியாகவில்லை என்றும் ஒரு பேச்சு ஓடுவது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கவனம் ஈர்த்த இயக்குநர்களின் கதைகளில் நடிப்பதையும் ரவி அதிகரிக்கவிருக்கிறாராம்.

ஆர்த்தியுடன் பிரிவு: இதற்கிடையே ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஜெயம் ரவி. அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். ஆனால் அண்மையில் தான் ஆர்த்தியை பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அது பெரும் பேசுபொருளானது. ஆனால் ரவியின் விவாகரத்து முடிவு தனக்கு தெரியாது என ஆர்த்தி கூறினார். இருந்தாலும் விவாகரத்து மனுவையும் ஜெயம் ரவி தாக்கல் செய்துவிட்டார். இந்த விவகாரம் தொடர்பாகவும் ரொம்பவே பக்குவமாக பல பேட்டிகளில் அவர் பேசிவருகிறார்.

மும்பையில் செட்டில்: மேலும் ஜெயம் ரவி இப்போது மும்பையிலும் செட்டிலாகியிருக்கிறார். பாலிவுட்டில் நடிக்கும் ஆசை அவருக்கு வந்திருக்கிறது. அதனை நிறைவேற்ற வேண்டுமென்றால் கண்டிப்பாக அங்கே தங்க வேண்டிய சூழல் இருக்கிறது. எனவேதான் அங்கு குடியேறியிருப்பதாக அவரே தெரிவித்திருக்கிறார். பாலிவுட்டில் நடிக்க சென்றாலும் தமிழ் படங்களை ஒட்டுமொத்தமாக ஒதுக்கும் ஐடியாவில் எல்லாம் இல்லை என்றும் அவர் சொல்லியிருப்பது கவனிக்கத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X