இப்படியெல்லாம் மோசம் பண்ணக்கூடாது?.. கடுப்பான ரசிகர்.. உடனே கூல் பண்ண ஜெயம் ரவி.. செம!

சென்னை: கடந்த இரு ஆண்டுகளாக அருள்மொழிவர்மன் ஆக திரையரங்குகளில் ரசிகர்களை ஆட்சி செய்து வந்த ஜெயம் ரவி பிப்ரவரி 16 வெளியான சைரன் திரைப்படத்தில் திலக வருமனாக நடித்து மாஸ் காட்டியிருக்கிறார்.

அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், யோகி பாபு மற்றும் சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான சைரன் 108 திரைப்படம் முதல் நாளில் நல்ல ஓப்பனிங்கை பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Jayam Ravi immediate respond to upset fan makes him happy

மதுரை தியேட்டரில் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் படம் பார்த்த ஜெயம் ரவி அதன் பின்னர் ரசிகர்களுடன் புகைப்படங்களையும் செல்ஃபி போட்டோக்களையும் எடுத்துக் கொண்டார். இந்நிலையில், ஜெயம் ரவியுடன் போட்டோ எடுத்துக் கொள்ள முடியாத வருத்தத்தில் ரசிகர் ஒருவர் பதிவிட்ட வீட்டுக்கு உடனடியாக பதில் கொடுத்து அவரைக் கூல் செய்துள்ளார் ஜெயம் ரவி.

கலவையான விமர்சனங்கள்: ஜெயம் ரவி கடந்த ஆண்டு நடித்த பொன்னியின் செல்வன் 2 கலவையான விமர்சனங்களுடன் 350 கோடி ரூபாய் வசூல் ஈட்டியது. ஜெயம் ரவி சோலோவாக நடித்த அகிலன் மற்றும் இறைவன் உள்ளிட்ட படங்கள் படுதோல்வியை சந்தித்தன. ஆனால், நேற்று வெளியான சைரன் திரைப்படம் நல்ல வெற்றி படமாகவே அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் சில காட்சிகள் படு மோசமாக இருப்பதாகவும் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. தனி ஒருவன், கோமாளி படங்கள் அளவுக்கு பிளாக்பஸ்டர் படங்களாக சைரன் இருக்குமா என்பது சந்தேகம் தான்.

Jayam Ravi immediate respond to upset fan makes him happy

கோபப்பட்ட ரசிகர்: ஃபேன்ஸ் கிளப்பை மட்டும் அழைத்து செல்ஃபி எடுத்துக் கொண்டிருக்கலாமே தேவையில்லாமல் எங்களை எல்லாம் ஏன் அழைத்தீர்கள் ஜெயம் ரவி. உங்களை நம்பி வந்ததற்கு நல்லா வச்சு செஞ்சீங்க, இன்னைக்கு ரொம்பவே வொர்ஸ்டான நாள், உங்களோட பிஹேவியர் சுத்தமா பிடிக்கல, உங்களை ரொம்பவே வெறுக்கிறேன் என ரசிகர் ஒருவர் காட்டமாக பதிவிட்டு இருந்தார்.

கூல் செய்த ஜெயம் ரவி: ஐயோ அந்த அளவுக்கெல்லாம் வெறுத்து விடாதீர்கள் பிரதர். நேற்று மட்டும் சுமார் 300 பேருடன் செல்ஃபி மற்றும் புகைப்படங்களை எடுத்துக் கொண்டேன்.. உங்களை எப்படி மிஸ் செய்தேன் என்று தெரியவில்லை. ஒன்றும் பிரச்சனை இல்லை சென்னைக்கு வாங்க, நாம செல்ஃபி எடுத்துக்கலாம் என உடனடியாக எனது பிசியான ஷெட்யூலிலும் ரசிகர்கள் தான் முக்கியம் என நினைத்து ஜெயம் ரவி போட்ட பதிவு மற்றும் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

டெலிட் செய்த ரசிகர்: ஜெயம் ரவி இப்படி சொன்னதும், ஹேப்பியான அந்த ரசிகர் உடனே தனது ட்வீட்டையும் டெலிட் செய்துள்ளார். ஜெயம் ரவி போட்ட பதிவுக்கு கீழ் ஏகப்பட்ட ரசிகர்கள் யாருடனும் சண்டைக்குப் போகாத இந்த தங்கமான குணத்திற்காக தான் உங்களுடைய ரசிகராக இருக்கிறோம் என பாராட்டி வருகின்றனர்.

விஜய் அரசியல் பற்றி: பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் ஜெயம்ரவி இடம் விஜயின் அரசியல் வருகை குறித்தும் அவருடன் இணைந்து அரசியல் களத்திற்குள் நீங்களும் வருவீர்களா என்ற கேள்விக்கு, என்னுடைய வட்டம் சினிமா மட்டுமே.. அதுப் பற்றி எல்லாம் எனக்கு தெரியாது என தெளிவாக பதில் அளித்துள்ளார்.

விஜய் இடத்தை யாரும் நிரப்ப முடியாது: மேலும், சினிமாவில் நடிகர் விஜயின் இடத்தை யார் நிரப்பப் போகிறார்கள் என்கிற கேள்விக்கு பதில் அளித்த ஜெயம் ரவி விஜய் அண்ணாவோட இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அந்த இடம் அவருக்கு ஆனது மட்டும் தான் எனக் கூறி தளபதி ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X