ஜெயம் ரவி மும்பைக்கு சும்மா ஜாலி பண்ண போகல.. 2 பாலிவுட் படங்களை புக் பண்ணிட்டாராம்!
சென்னை: மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யப் போவதாக அதிரடியாக ஜெயம் ரவி அறிவித்த நிலையில் அவரை சுற்றிய சர்ச்சைகளும் வதந்திகளும் அதிகம் உலாவி வருகின்றன. அதையெல்லாம் கடந்து சினிமாவில் தனது கவனத்தை இன்னமும் அதிகரித்து வரும் ஜெயம் ரவி திடீரென மும்பைக்கு சென்றிருந்தது கோலிவுட்டை சற்றே ஷாக் ஆக்கியது.
நடிகர் சூர்யா, நடிகைகள் சமந்தா, ராஷ்மிகா மந்தனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், தமன்னா, ஸ்ரீலீலா என வரிசையாக பலர் பாலிவுட் பக்கம் சென்றுள்ள நிலையில், நடிகர் ஜெயம் ரவியும் மும்பைக்கு ஏன் சென்றுள்ளார் என்கிற கேள்விகள் கிளம்பின.

கோவாவில் பாடகி கெனிஷாவுடன் ஜெயம் ரவி சுற்றியதாக வதந்திகள் வெளியானது போல மும்பையிலும் ரிலாக்ஸ் செய்ய அவர் சென்றிருப்பதாக பேச்சுக்கள் அடிபட்டன. ஆனால், பாலிவுட்டில் 2 படங்களை கமிட் செய்து விட்டு வந்திருக்கிறாராம் ஜெயம் ரவி. அதை அவரே கூறியுள்ளார்.
ஜெயம் ரவி ரொம்ப பிஸி: ஆர்த்தியின் அம்மா தயாரிப்பில் கடைசியாக ஜெயம் ரவி நடித்த சைரன் திரைப்படம் வெளியானது. அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு சரியாக போகாத நிலையில், தான் குடும்பத்தில் பிரச்சனை வந்தது என பேச்சுக்கள் கிளம்பின. அதன் பின்னர், பாடகியுடன் தொடர்பு படுத்தியும் பேச்சுக்கள் அடிபட்டன. ஜெயம் ரவிக்கு இதற்கு மேல் பட வாய்ப்புகள் குறையும் என்றெல்லாம் சொல்லப்பட்டு வந்த நிலையில், பிரச்சனையை லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்யும் மைக்கேல் ஹஸி போலவே தமிழில் மட்டும் சுமார் 5 படங்களுக்கும் மேல் ஜெயம் ரவி கைவசம் உள்ளன.
5 படங்கள்: வரும் தீபாவளிக்கு ஜெயம் ரவி, பிரியங்கா மோகன் நடித்துள்ள பிரதர் திரைப்படம் வெளியாகிறது. அதனை தொடர்ந்து ஜீனி, தனி ஒருவன் 2 உள்ளிட்ட படங்கள் கைவசம் உள்ளன. இந்நிலையில், புதிதாக BTG Universal நிறுவனத்துடன் இணைந்து இரண்டு புதிய படங்களில் பணியாற்றவுள்ளார். பிரம்மாண்டமான கமர்ஷியல் படங்களாக உருவாகவுள்ள, புதிய படைப்புகள் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என அறிவித்துள்ளனர். டிமான்ட்டி காலனி 2, ரெட்ட தல உள்ளிட்ட படங்களை அந்த நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பாலிவுட்டில் 2 படம்: இதுவரை கோலிவுட்டை மட்டுமே குறி வைத்து ஜெயம் படத்தில் இருந்து பிரதர் படம் வரை நடித்து வரும் ஜெயம் ரவி திடீரென மும்பைக்கு சென்று வந்த நிலையில், அங்கே 2 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக அவரே சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வரும் என்றும் மீடியாக்களுக்கும் ரசிகர்களுக்கும் தான் முதலில் சொல்வேன் என்றும் ஜெயம் ரவி செம கூலாக பதில் அளித்துள்ளார்.
4 படங்கள் போட்டி: இந்த ஆண்டு தீபாவளிக்கு சிவகார்த்திகேயனின் அமரன், கவின் நடித்துள்ள பிளடி பெக்கர் மற்றும் துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் படங்களுடன் ஜெயம் ரவி நடித்துள்ள பிரதர் படம் போட்டியிடுகிறது. சிவா மனசுல சக்தி, ஒரு கல் ஒரு கண்ணாடி, பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட காமெடி படங்களை இயக்கிய ராஜேஷ். எம் இயக்கத்தில் உருவாகியுள்ள பிரதர் திரைப்படம் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றிப் படமாக இருக்கும் என ஜெயம் ரவி கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications