கலைஞர் தாத்தாவுக்கு மரியாதை செய்த ஜெயம் ரவி மகன்கள்: வைரல் போட்டோ

By Siva

சென்னை: கருணாநிதிக்கு தனது மகன்கள் மரியாதை செலுத்தியபோது எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் நடிகர் ஜெயம் ரவி.

திமுக தலைவர் கருணாநிதி காலமான செய்தி வெளியானதில் இருந்து அனைவரும் டிவியில் அவர் தொடர்பான நிகழ்ச்சிகளையே பார்த்தனர். ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தியது, அவரது இறுதி ஊர்வலம், மெரினாவில் அடக்கம் செய்தது வரை மக்கள் அந்த நிகழ்ச்சியை டிவியில் பார்த்தனர்.

Jayam Ravis son pay respect to Karunanidhi

கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட பிறகே பிற நிகழ்ச்சிகளுக்கு சென்றனர். இந்நிலையில் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட்டதை நடிகர் ஜெயம் ரவியின் மகன்கள் ஆரவ், அயான் ஆகியோர் டிவியில் பார்த்துள்ளனர்.

அப்போது ராணுவ மரியாதை செய்யப்பட்டதை பார்த்த இருவரும் எழுந்து நின்று மூத்த தலைவருக்கு மரியாதை செலுத்தியுள்ளனர். அதை புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் ரவி.

கலைஞர் தாத்தாவுக்கு மரியாதை என்று கூறி அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ஜெயம் ரவி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X