Jayam Ravi - ‘கார்த்தியிடம் ஃபோனில் பேசினால் அவ்வளவுதான்’.. மனைவி பற்றி ஜெயம் ரவி ஓபன் டாக்
சென்னை: ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துக்கொண்டிருக்கும் இவர் பொன்னியின் செல்வன் படத்தில் அருண்மொழி வர்மனாக தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தினார். அவரது நடிப்பில் கடைசியாக சைரன் திரைப்படம் வெளியானது. படத்துக்கு ரசிகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களையே கொடுத்துவருகின்றனர். இந்தச் சூழலில் தனது மனைவி குறித்து தனியார் யூட்யூப் சேனலுக்கு அவர் அளித்திருக்கும் பேட்டி இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமானவர் ஜெயம் ரவி. தெலுங்கு படத்தின் ரீமேக்காக உருவான அந்தப் படத்தை ரவியின் அண்ணன் ராஜா இயக்கியிருந்தார். முதல் படமே அதிரிபுதிரி ஹிட்டடிக்க ஜெயம் ரவி அடுத்தடுத்து படங்களில் கமிட்டானார். ஜெயம் படத்தின் வெற்றிக்கு பிறகு அடுத்தடுத்து படங்களில் கமிட்டானாலும் பெரும்பாலும் அவை அண்ணன் ராஜா இயக்கும் படங்களாகவே அமைந்தன. இருப்பினும் அப்படி அவர் நடித்த படங்களும் ஹிட்டாக கோலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக்கொண்டார். இருப்பினும் பக்கா ஆக்ஷன் ஹீரோவாக மாறக்கூடிய படத்துக்காக ஜெயம் ரவி காத்திருக்கவும் செய்தார்.

பேராண்மை: அப்படி காத்திருந்தவருக்கு பேராண்மை படம் கிடைத்தது. எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவான அப்படத்தில் பழங்குடியினத்தை சேர்ந்த இளைஞனாக துருவன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ரவி. படத்துக்கு தேவையான ஆக்ஷனை அளவாகவும், நடிப்பை சிறப்பாகவும் வழங்கிய ரவியை பார்த்து கோலிவுட் ஆச்சரியம்தான் பட்டது. இதனையடுத்து ஆக்ஷன் படங்களிலும் கவனம் செலுத்த ஆரம்பித்த ரவி தனி ஒருவன் படத்தில் நடித்தார்.
மெகா ஹிட் தனி ஒருவன்: தனி ஒருவன் படம்தான் ஜெயம் ரவியை வைத்து ஜெயம் ராஜா இயக்கிய சொந்த கதை ஆகும். ஐபிஎஸ் அதிகாரியாக நடித்திருந்த ரவியுடன் அரவிந்த் சாமி, நயன்தாரா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பக்கா ஆக்ஷன் த்ரில்லராகவும், சமூகத்துக்கு மெசேஜ் சொல்லும் வகையிலும் உருவான அந்தப் படம் மெகா ப்ளாக்பஸ்டர் ஆனது. தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர் பொன்னியின் செல்வன் படத்தில் அருண்மொழி வர்மன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
சைரன்: பொன்னியின் செல்வன் படத்துக்கு பிறகு அவர் நடித்த அகிலன், இறைவன் ஆகிய படங்கள் படுதோல்வியை சந்தித்தன. அடுத்ததாக அவர் நடிப்பில் சமீபத்தில் சைரன் திரைப்படம் வெளியானது. கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருக்கிறது. படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்தச் சூழலில் அவர் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
ஜெயம் ரவி பேட்டி: அவர் அளித்த பேட்டியில், "ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரும் வெவ்வேறு மனநிலையில் இருக்கிறார்கள். சில நேரங்களில் பட ரிலீஸின்போது டென்ஷன் ஏற்படும். அந்த டென்ஷனிலிருந்து எனது மனைவி என்னை வெளியே கொண்டுவருவார். நான் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் அவர் பார்த்துக்கொள்வார். எந்த ட்ரெஸ்ஸுடன் எந்த மாதிரியான் காலணியை அணிய வேண்டும் என்றுகூட எனக்கு தெரியாது.
செம பொசசிவ்: என்னால் வீட்டுக்கு செல்ல முடியவில்லை என்றால் அதை அவரால் புரிந்துகொள்ள முடியும். பொதுவாக ஆண்கள் தங்கள் மனைவிகளிடம் பேசுவதைவிட ஆண்களிடம் அரைமணி நேரம் அதிகம் பேசுவதாகத்தான் நினைப்பார்கள். கார்த்தி எனக்கு நெருக்கமானவர். நானும் கார்த்தியும் ஃபோனில் பேசும்போது; எனது மனைவி என்னிடம், நீ ஏன் என்னிடம் இவ்வளவு நேரம் பேசவில்லை என கேட்பார். அந்த அளவுக்கு அவருக்கு பொசசிவ் இருக்கும். ஏதாவது படத்தை பற்றி சொன்னால் அதை பற்றியெல்லாம் எனக்கு தெரியாது என்பார். எனக்கு பெண் குழந்தை இல்லாதது வருத்தமாக இருக்கிறது" என்றார்.


Click it and Unblock the Notifications











