Jayam Ravi: மும்பையில் முகாமிட்ட ஜெயம் ரவி.. சூர்யாவை போல பாலிவுட் பக்கம் இவரும் கிளம்பிட்டாரா பாஸ்?

மும்பை: நடிகர் ஜெயம் ரவி மும்பைக்குச் சென்றுள்ள நிலையில், விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் எடுத்த வீடியோக்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. தென்னிந்திய நடிகர்கள் பலர் பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர். பொதுவாக சமந்தா, ராஷ்மிகா மந்தனா, ஸ்ரீலீலா உள்ளிட்ட நடிகைகள் அதிகளவில் மும்பைக்கு அடிக்கடி பறந்து வரும் நிலையில், ஜெயம் ரவி திடீரென மும்பைக்கு விசிட் அடித்திருப்பது ஏன் என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.

நடிகர் ஜெயம் ரவி சமீபத்தில் தனது மனைவி ஆர்த்தி ரவியை பிரியப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஆனால், அதுபற்றி தனக்கு எதுவுமே தெரியாது என்றும் ஜெயம் ரவியுடன் தன்னை பேசவே அனுமதிக்கவில்லை என்றும் அவர் வெளியிட்ட அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

jayam ravi brother divorce

மேலும், பாடகி கெனிஷா என்பவருடன் ஜெயம் ரவிக்கு தொடர்பு இருப்பது போல கிசுகிசுக்கள் கிளம்பிய நிலையில், தாங்கள் இருவரும் நண்பர்களாக மட்டுமே உள்ளோம் என ஜெயம் ரவி விளக்கம் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மும்பையில் ஜெயம் ரவி: கலர் கலர் உடையை அணிந்துக் கொண்டு நடிகர் ஜெயம் ரவி மும்பைக்கு கிளம்பிச் சென்றுள்ளார். விமான நிலையத்தில் புகைப்படக் கலைஞர்கள் அவரை போட்டோக்கள் எடுத்தும் வீடியோக்கள் எடுத்தும் சோஷியல் மீடியாவில் தீயாக ஷேர் செய்துள்ளனர். மும்பைக்கு திடீரென ஜெயம் ரவி புறப்பட்டுச் சென்றிருப்பது ஏன் என்கிற கேள்விகள் தற்போது கோடம்பாக்கத்தில் ஹெவியாக கிளம்பியுள்ளது.

ஜெயம் ரவி பதில்: நடிகர் ஜெயம் ரவியிடம் மும்பைக்கு ஏன் வந்து இருக்கீங்க என்றும் புதிதாக உங்கள் நடிப்பில் என்ன என்ன படங்கள் வரப்போகிறது என புகைப்படக் கலைஞர்கள் கேட்க அதற்கு பதில் அளித்த ஜெயம் ரவி தனது பிரதர் திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகப் போகிறது என்றும் அதன் பின்னர் காதலிக்க நேரமில்லை, ஜீனி உள்ளிட்ட படங்கள் வரிசையாக வர காத்திருக்கிறது என்றும் புரமோஷன் பணிகளுக்காக தற்போது மும்பைக்கு வந்திருப்பதாக ஜெயம் ரவி அறிவித்துள்ளார்.

இந்தி படத்தில் நடிக்கப் போறாரா?: நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகாவுடன் மும்பையில் செட்டில் ஆன நிலையில், இந்தி படங்களிலும் அவர் ஆர்வம் செலுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகின. சர்ஃபிரா படத்தை அக்‌ஷய் குமாரை வைத்து தயாரித்து இருந்தார். தூம் 4 படத்தில் சூர்யா வில்லனாக நடிக்கப் போவதாகவும் பேச்சுவார்த்தைகள் அடிபட்டு வருகின்றன. இந்நிலையில், ஜெயம் ரவியும் இந்தி படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளாரா? என்கிற கேள்விகளையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X