முல்லைப் பெரியாறு குறித்த கேள்விக்கு நிருபர் காலில் விழுந்த ஜெயராம்!

வெள்ளிக்கிழமை சபரிமலை கோவிலுக்கு மலையாள நடிகர் ஜெயராம் சென்றிருந்தார்.
தமிழக - கேரள எல்லையில் முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக பதட்டம் நிலவி வரும் நேரத்தில், இதுகுறித்து ஜெயராமிடம் கேரள தொலைக்காட்சி நிருபர் ஒருவர், முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து கருத்து கேட்டார்.
ஏற்கெனவே தமிழ்ப் பெண்களை இழிவாகப் பேசியதில் பெரும் அவஸ்தையை அனுபவித்த ஜெயராம், சுதாரித்துக் கொண்டு, ''ஐயோ... ஆளவிடுங்கப்பா சாமி'' என்று அந்த நிருபரின் காலில் விழுந்தார்.
கடந்த ஆண்டு ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் 'கறுத்து தடித்த எருமை போல உள்ள தமிழச்சி' என தன் வீட்டு வேலைக்காரியை வர்ணித்தார். இது தமிழ்ப் பெண்களை இழிவுபடுத்தும் செயல் என நாம் தமிழர் கட்சியினர் அவர் வீட்டை தாக்கியதும், பின்னர் ஜெயராம் பகிரங்கமாக அனைத்து தமிழர்களிடமும் மன்னிப்பு கேட்டதும் நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications











