ஜெயராம் 60 வயசுல என்னம்மா ஆடுறாரு.. சாண்டி மாஸ்டருக்கே ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு.. மிஸ்கின் கலாய்!
சென்னை: பாண்டிராஜ் இயக்கத்தில் பரிமளா அண்ட் கோ படத்தில் ஜெயராம், ஊர்வசி, சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வரும் மே 28ம் தேதி வெளியாக காத்திருக்கிறது. அடுத்த வாரம் ஆக்ஷன் கிங் அர்ஜுனின் பிளாஸ்ட் படத்துடன் பரிமளா அண்ட் கோ படம் நேரடியாக மோதுகிறது.
மே 22ம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக பரிமளா அண்ட் கோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அந்த விழாவில் பங்கேற்ற ஜெயராம் சாண்டி மாஸ்டரே ஷாக் ஆகும் அளவுக்கு டான்ஸ் ஆடிய வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

முன்னதாக படத்தின் பிரஸ் மீட்டின் போது மிஸ்கின் தூக்கிக் கொண்டு உட்கார்ந்திருந்தது போல ஜெயராம் இமிடேட் பண்ணது ஹைலைட் ஆன நிலையில், தற்போது இந்த வீடியோவையும் வைரலாகி வருகிறது.
ஜாலியான மனுஷன்: நடிகர் ஜெயராம் சமீப காலமாக தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் ஆழ்வார்க்கடியான் நம்பியாக நடித்து அசத்தினார். சூர்யாவின் ரெட்ரோ படத்தில் நகைச்சுவை மருத்துவராக வித்தியாசமான ரோலில் நடித்து ஸ்கோர் செய்தார். இந்நிலையில், தற்போது கதையின் நாயகனாக பரிமளா அண்ட் கோ படத்தில் ஊர்வசி உடன் இணைந்து லூட்டி அடித்துள்ளார்.
தனுஷுக்கு வில்லன்: சரத்குமார் மற்றும் அசோக் செல்வனை வைத்து போர் தொழில் எனும் தரமான படத்தை கொடுத்த விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ், மமிதா பைஜு நடித்த கர படத்தில் முக்கிய வில்லனே ஜெயராம் தான். பேங்க் மேனேஜராக அவர் நடித்த கதாபாத்திரம் ரசிகர்களை மிரள வைத்தது. ஆனால், படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில், மீண்டும் தனது காமெடி டைமிங் மோடுக்கு திரும்பியுள்ளார் ஜெயராம்.
60 வயசுல என்னவொரு ஆட்டம்: பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள பரிமளா அண்ட் கோ படம் அடுத்த வாரம் வெளியாகவுள்ள நிலையில், அதன் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. சாண்டி மாஸ்டருடன் சேர்ந்துக் கொண்டு "ஏரோபிளேன் பறக்குது பார் மேலே" பாட்டுக்கு ஜெயராம் ஆடிய ஆட்டத்தை பார்த்து சாண்டி மாஸ்டரே ஸ்டன்னாகி நின்ன வீடியோவை தற்போது ரசிகர்கள் அதிகம் பரப்பி வருகின்றனர். அடுத்த வாரம் அர்ஜுனின் பிளாஸ்ட் மற்றும் ஜெயராமின் பரிமளா அண்ட் கோ உள்ளிட்ட படங்கள் ரசிகர்களுக்கு செம என்டர்டெயின்மென்ட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications