கார்த்தியை இயக்க தயாராகும் கமல் இயக்குனர்!

நடிகர் கார்த்தியின் அடுத்தப்படத்தை ஜீது ஜோசப் இயக்குகிறார்.

சென்னை: நடிகர் கார்த்தியின் அடுத்தப்படத்தை பாபநாசம் திரைப்பட இயக்குனர் ஜீது ஜோசப் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாண்டிராஜ் இயக்கத்த்தில் கார்த்தி நடித்த 'கடைக்குட்டி சிங்கம்' சூப்பர் ஹிட்டானது. சின்னபாபு என்ற பெயரில் வெளியாகி தெலுங்கிலும் இப்படம் பெரும் வெற்றியை குவித்தது.

விமர்சனம் ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படம் பெரும் வெற்றி பெற்றது. குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு உள்பட பல்வேறு தரப்பினரும் இப்படத்தை பாராட்டினர். இதனால் கார்த்தியின் அடுத்தப்படம் குறித்த எதிர்பாப்பு எக்கச்சக்கமாக எகிறியுள்ளது.

கார்த்தி நடிக்கும் தேவ்

கார்த்தி நடிக்கும் தேவ்

கடைக்குட்டி சிங்கத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ரஜத் ரவிஷங்கர் இயக்கும் ‘தேவ்' படத்தில் கார்த்தி நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்து வருகிறார்.

மணாலி வெள்ளம்

மணாலி வெள்ளம்

சில தினங்களுக்கு முன்பு தேவ் படத்தின் படப்பிடிப்புக்காக மணாலி சென்ற கார்த்தி உள்ளிட்ட படக்குழுவினர் வெள்ளத்தில் சிக்கினர். அதில் இருந்து மீண்டு வந்த படக்குழுவினர், வெவ்வேறு இடங்களில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.

கார்த்தியின் அடுத்தப்படம்

கார்த்தியின் அடுத்தப்படம்

இந்நிலையில் கார்த்தி நடிக்கும் அடுத்த படம் குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘வியாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும், இப்படத்தை பாபநாசம் படத்தை இயக்கிய ஜீது ஜோசப் இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

த்ரில்லர் படம்

த்ரில்லர் படம்

இன்னும் பெயரிடப்படாத இப்படம் த்ரில்லர் படமாக உருவாகவுள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே ஜீது ஜோசப் த்ரில்லர் வகை படங்களை உருவாக்குவதில் வல்லவர். அதனால் தான் இப்படம் த்ரில்லர் படமாக இருக்கலாம் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. இதனால் கார்த்தியின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X