»   »  புரளிப் பிரியன் ஜீவா!

புரளிப் பிரியன் ஜீவா!

Subscribe to Oneindia Tamil

இளம் நடிகர்களில் படு வேகமாக முன்னணிக்கு வந்து கொண்டிருக்கும் ஜீவா படுஜாலி பிளஸ் ஜோவியல் பேர்வழி.

வித்தியாசமான கேரக்டர்களைத் தேடிப் பிடித்து தனது நடிப்பு தாகத்தைத் தணித்துக்கொண்டிருக்கும் ஜீவாவின் ஒவ்வொரு படமும் இப்போது, கமல், விக்ரமும்ரேஞ்சுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளது.

ஆரம்பத்தில் சாக்லேட் பேபியாக நடித்துக் கொண்டிருந்தவரை அமீர் பிடித்து ராம்படத்தில் வித்தியாசப்படுத்தி மிரள வைத்தார். அப்போது ஆரம்பித்த ஜீவாவின்கலக்கல் கலைப் பயணம் இப்போது உச்சகட்டத்தை நோக்கி பாய்ந்தோடஆரம்பித்திருக்கிறது.

எனக்கென்று எந்த இமேஜையும் உருவாக்கிக் கொள்ள நான் விரும்பவில்லை.சாக்லேட் பாயாகவும் நடிக்க ரெடி, ஆக்ஷனுக்கும் தயார், ராம் போன்ற சீரியஸ்வேடத்திற்கும் ஓ.கே. என்னை ரசிகர்கள் வித்தியாசமாக பார்க்க பழகி விட்டார்கள்.அது எல்லோருக்கும் கிடைக்காது.

எனக்கென்று எந்த வட்டத்தையும் போட்டுக் கொள்ளாமல், அப்படி ஒன்று வந்துவிடாமல் படு ஜாக்கிரதையாக இருக்கிறேன். ஒவ்வொரு படமும் ஒரு டேஸ்ட்டில்இருக்க வேண்டும் என விரும்புகிறேன். அப்பத்தான் நம்ம நடிப்பை அனைவரும்கவனிப்பார்கள், ஹாயாக ரசிப்பார்கள் என்று பிராக்டிகலாக பேசுகிறார் ஜீவா.

எந்த நடிகருடனும் சேர்ந்து நடிக்கத் தயார். அது சிம்புவானாலும் சரி, தனுஷாகஇருந்தாலும் சரி. கதை பிடித்திருந்தால் போதும். செகண்ட் ஹீரோவாகக் கூட நடிக்கத்தயார் என்று கூறும் ஜீவா, தன்னைப் பற்றி போதிய அளவில் கிசுகிசுக்கள், புரளிச்செய்திகள் வராதது குறித்து வருத்தமும் படுகிறார்.

தன்னைப் பார்க்கும் செய்தியாளர்களிடம் எல்லாம், என்னைப் பத்தியும் நிறைய கிசுகிசுஎழுதுங்க பாஸ், ஏதாவது புரளியைக் கிளப்பி விடுங்க, அப்பத்தான் ஒரு இதுவாகஇருக்கும் என்கிறாராம் ஓப்பனாக.

வில்லங்கம் புடிச்ச ஆளா இருப்பாரு போலிருக்கே, கோவிந்தா!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil