ஜீவா - சிவா இணையும் புதிய படம்.... சூட்டிங் ஆரம்பம்

சென்னை : கலகலப்பு 2 படத்தில் ஜீவா மற்றும் மிர்ச்சி சிவா இணைந்து நடித்திருந்தனர்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு கோல்மால் என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் பூஜை இன்றைய தினம் நடத்தப்பட்டது.

 கலகலப்பு 2 படம்

கலகலப்பு 2 படம்

சுந்தர் சி இயக்கத்தில் நடிகர்கள் ஜீவா மற்றும் மிர்ச்சி சிவா இருவரும் கலகலப்பு 2 படத்தில் நடித்திருந்தனர். ஜெய், அஞ்சலி உள்ளிட்டவர்களும் இந்தப் படத்தில் லீட் கதாபாத்திரங்களில் நடித்திருந்த நிலையில் படம் சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றது. காமெடி கலாட்டாவாக படம் இருந்தது.

மீண்டும் இணையும் நாயகர்கள்

மீண்டும் இணையும் நாயகர்கள்

இந்நிலையில் கலகலப்பு 2வில் இணைந்து நடித்த ஜீவா மற்றும் மிர்ச்சி சிவா இருவரும் மீண்டும் ஒரு காமெடி படத்தில் கூட்டணி அமைத்துள்ளனர். படத்திற்கு கோல்மால் என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்தை பொன் குமரன் இயக்கவுள்ளார். படத்தின் பூஜை இன்றைய தினம் போடப்பட்டுள்ளது.

பொன் குமரன் இயக்கம்

பொன் குமரன் இயக்கம்

லிங்கா படத்திற்கு கதாசிரியராக இருந்த பொன் குமரன், பிரியாமணி நடிப்பில் தமிழ், கன்னட மொழிகளில் வெளியான சாருலதா படத்தையும் இயக்கியிருந்தார். இந்நிலையில் தற்போது கோல்மால் படத்தை பொன் குமரன் இயக்கவுள்ளார். படத்தில் ஜீவா மற்றும் சிவாவுடன் பாயல் ராஜ்புட், தான்யா, யோகிபாபு உள்ளிட்டவர்கள் நடிக்கவுள்ளனர்.

நவம்பரில் படப்பிடிப்பு

நவம்பரில் படப்பிடிப்பு

இதன் மொத்த படப்பிடிப்பி மொர்ரிசியஸ் நாட்டில் நடைபெறவுள்ளது. நவம்பரில் இதன் படப்பிடிப்பை துவங்கி ஒரேகட்டமா முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. காமெடி கலாட்டாவிற்கு படத்தில் பஞ்சமிருக்காது என்று இயக்குநர் தெரிவித்துள்ளார். படத்தின் இசையை அருள் தேவ் என்பவர் மேற்கொண்டுள்ளார். காமெடி படங்களுக்கு எப்போதுமே ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு காணப்படும் நிலையில் இந்தப் படமும் சிறப்பான வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கலாம்.

காமெடிக்கு பஞ்சமிருக்காது

காமெடிக்கு பஞ்சமிருக்காது

மிர்ச்சி சிவா நடிப்பில் காசேதான் கடவுளடா படம் உருவாகி வருகிறது. இந்நிலையில் அடுத்ததாக அவர் கோல்மால் என்ற இந்தப் படத்தில் இணைந்துள்ளார். மிர்ச்சி சிவா என்றாலே காமெடிக்கு பஞ்சமிருக்காது. இந்தப் படத்தில் காமெடி குறித்து இயக்குநரே உறுதி அளித்துள்ளார். மேலும் ஜீவாவும் படத்தில் இணைந்துள்ளது எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. ஜீவா -சிவா கூட்டணி கவகலப்பு 2 படத்தில பட்டையை கிளப்பியது நினைவிருக்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X