»   »  மோகன்லால் மீது ஜீவா பாய்ச்சல்

மோகன்லால் மீது ஜீவா பாய்ச்சல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழில் மோகன்லாலுக்கு மார்க்கெட் இல்லாததால்தான் அவருக்குப் பதில் நடிகர்ராஜீவை டப்பிங் பேச வைத்தோம் என்று அரண் படத்தில் தன்னை டப்பிங் பேசவிடவில்லையை என்று புலம்பியுள்ள நடிகர் மோகன்லாலுக்கு பதிலடிகொடுத்துள்ளார் நடிகர் ஜீவா.

ஜீவாவின் தந்தை ஆர்.பி. செளத்ரியின் தயாரிப்பில் கோபிகா, ஜீவா, மோகன்லால் நடிப்பில்உருவாகியுள்ள படம் அரண். மலையாளத்தில் உருவான இந்தப் படம் தமிழில் டப்செய்யப்பட்டுள்ளது.

படத்தில் மோகன்லாலுக்கு நடிகர் ராஜீவ் குரல் கொடுத்துள்ளார். இதனால்மோகன்லால் கடுப்பாகி செளத்ரியும், இயக்குனர் மேஜர் ரவியும் தன்னை அவமதிததுவிட்டார்கள் என குற்றம் சாட்டினார்.

மேலும் ஜீவாவுக்கு கூடுதல் காட்சிகளையும், காமெடிக் காட்சிகளையும் சேர்த்துவிட்டார்கள் எனவும் கூறியுள்ளார்.

தனது தந்தை செளத்ரியை குறை கூறிய மோகன்லாலுக்கு ஜீவா பதிலடி தந்துள்ளார்.ஜீவா கூறுகையில், அரண் படம் கேரளாவில் கீர்த்தி சக்ரா என்ற பெயரில் சூப்பர் ஹிட்படமாகியுள்ளது. தமிழிலும் நன்றாக ஓடிவருகிறது.

இந் நிநலையில் மோகன்லால் இப்படிபேசியிருப்பது வருத்தம் தருகிறது.மோகன்லாலுக்குத்தான் இப்படத்தில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. நான் 2வதுஹீரோதான். தமிழில் முதலில் மோகன்லாலைத்தான் டப்பிங் பேச வைக்க முடிவுசெய்திருந்தோம்.

ஆனால் டப்பிங் பேச அவர் அதிக பணம் கேட்டார். அத்தோடு லண்டனுக்குப் போய்விட்டார். திரும்ப வந்துதான் பேச முடியும் என்றும் கூறினார்.

அவர் வரும் வரைக்கும் காத்திருந்தால் படத்தை ரிலீஸ் செய்வது தாமதமாகி விடும்என்பதால்தான் ராஜீவை டப்பிங் பேச வைத்தோம். மேலும், மோகன்லாலுக்கு தமிழில்மார்க்கெட் கிடையாது. (அப்ப ஏன் நடிக்க வச்சீங்க?)

எனவே அவருக்காக காத்திருந்து டப்பிங் பேசவைக்க நாங்கள் தயாராக இல்லை.

அரணில் காமெடிக் காட்சிகள் முதலில் கிடையாது. காமெடிக் காட்சிகள் இல்லாமல்ஒரு தமிழ்ப் படமா என்பதால்தான் காமெடிக் காட்சிகளை சேர்த்தார்கள். அதில் தான்நானும் நடித்தேன். மோகன்லாலை டம்மியாக்க கூடுதலாக எனக்கு எந்தக் காட்சியும்வைக்கவில்லை.

இதில் மோகன்லால் வருத்தப்பட எதுவும் இல்லை என்று கூறியுள்ளார் ஜீவா.

Read more about: jeeva attacks mohanlal

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil