»   »  பிளே பாய் ஜீவன்!

பிளே பாய் ஜீவன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

30 வருடத்துக்கு முன்பு வந்து சக்கை போடு போட்ட நான் அவனில்லை படம்இப்போது அதே பெயரில் மீண்டும் தயாராகிறது.

ஜெமினி கணேசன் வேடத்தில் காக்க காக்க ஜீவன் நடிக்க அவருக்கு ஜோடியாக ஐந்துஹீரோயின்கள் திறமை காட்டுகின்றனர்.

ஜெமினி கணேசன் பிளே பாய் வேடத்தில் நடித்த படம் நான் அவனில்லை.கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் உருவான அந்தப் படத்தில் பல பெண்களை மயக்கிகடைசியில் கைவிட்டு விடும் கேரக்டரில் நடித்திருந்தார் ஜெமினி கணேசன்.

படம் பெரிய வெற்றியைப் பெறாவிட்டாலும் கூட ஜெமினியின் நடிப்புரசிக்கப்பட்டது. இப்போது அதே படம் அதே பெயரில் ஜீவன் நடிக்க உருவாகிறது.அவருக்கு ஜோடியாக நமீதா, மாளவிகா, கீர்த்தி சாவ்லா, ஜோதிர்மயி, சினேகாஆகியோர் நடிக்கவுள்ளனர்.

இதில் லட்சுமி நடித்த வேடத்தில் ஸ்னேகா நடிக்கிறாராம். மற்ற அனைவருக்கும்கிடுகிடுக்க வைக்கும் கிளாமர் வேடங்களாம். படத்தை செல்வா இயக்கவுள்ளார்.

சமீபத்தில் ஷூட்டிங் தொடங்கிய இப்படம் படு வேகமாக வளரத் தொடங்கியுள்ளது.இதில் நமீதாவுக்கும், மாளவிகாவுக்கும் இக்கால இளைஞர்களுக்கேற்ற வகையில்கில்லாடித்தனமான கிளாமர் வேடங்களை வைத்துள்ளாராம் செல்வா.

அதேபோல கீர்த்தி சாவ்லாவுக்கும் அந்த சைடை ஸ்டிராங்காக உருவாக்கியுள்ளார்.ஜோதிர்மயியை பட்டும் படாமலும் கையாண்டுள்ளார். ஸ்னேகாவுக்கு குடும்பப்பாங்கான வேடம். இருந்தாலும் அவருக்கும் கொஞ்சம் போல அது இருக்கிறதாம்.

ஒரிஜினல் நான் அவனில்லை கதையை அப்படியே எடுத்துக் கொண்டு இப்போதுள்ளஇளைஞர்களையும் மனதில் வைத்து கிளுகிளுப்பாக படத்தை எடுக்கிறாராம் செல்வா.

ஐந்து நாயகிகளின் அட்டகாசம் என்பதால் ரசிகர்களின் மனத் திரை என்னாகப்போகிறதோ?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil