»   »  அவர்கள் 5-அடங்கா ஜீவன்!

அவர்கள் 5-அடங்கா ஜீவன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கனிகள் மூன்று, தமிழும் மூன்று. ஆனால் நான் அவனில்லை படத்தில் மட்டும் ஐம்பெரும் கனிகள். அவர்களை அட்டாக் பண்ணி அமுக்கும்அடங்கா வாலிபனாக ஜீவன்!

அந்தக் காலத்தில் ஜெமினி கணேசன் நடித்து வெளி வந்த சூப்பர் படம்தான் நான் அவனில்லை. வித விதமான பெண்களை உல்லாசக் களியாட்டம்போடும் பிளே பாய் கேரக்டர். காதல் மன்னனாச்சே, ஜெமினி புகுந்து விளையாடியிருந்தார். ஆனால் படம் சுமாராகத் தான் ஓடியதாம்.

அதே படத்தை அதே பெயரில் இப்போது படு விறுவிறுப்பாக உருவாக்கி வருகிறார்கள். ஜீவன்தான் ஜெமினி கேரக்டரில் நடிக்கிறார். நிறையப்பெண்களை வைத்து கேரக்டரை அமைத்தால் பலான படமாக மாறி விடுமே என்ற அச்சத்தால் ஐந்து ஹீரோயின்களை மட்டும் வைத்துக் காண்டுஅதகளம் பண்ணி வருகிறார்கள்.

சுருள் முடியுடன் ஜீவன் நடிக்க, அவரது கேர்ள் பிரண்டுகளாக நச்சு நமீதா, மீனு மாளவிகா, ஜில்லு ஸ்னேகா, டல்லு ஜோதிர்மயி, கில்மா கீர்த்திசாவ்லா என ஐம் பெரும் அழகிகள் அசத்துகின்றனர்.

ஐந்து ஹீரோயின்களைக் கொண்ட படம் என்பதால் அவர்களின் கால்ஷீட்டுகளுக்கு ஏற்பட படத்தை மெதுவாக வளர்த்து வருகின்றனர்.ஒவ்வொருவருக்கும் கொஞ்சமும் குறைவில்லாமல் நடிக்கவும், கிளாமர் காட்டவும் வாய்ப்பு தந்திருக்கிறார்கள்.

ஸ்னேகாவுக்குக் கூட கொஞ்சம் போல கிளாமர் போர்ஷன் இருக்கிறதாம். ஜோதிர்மயி கூட ஒரு போர்ஷனில் புகுந்து விளையாடியுள்ளாராம்.கீர்த்தி சாவ்லாவுக்கும் ஒரு போர்ஷனை ஒதுக்கியுள்ளனர். ஆனால் நமீதா, மாளவிகா ஆகியோருக்கு பெரிய அபார்ட்மன்ட்டே கட்டிக்கொடுத்துள்ளனராம்.

அமெரிக்க, ஈராக் போரை விட நமீதா, மாளவிகாவுக்கு இடையிலான கிளாமர் வார்தான் படு ஜோராக இருக்கிறதாம். கூடவே கீர்த்தி சாவ்லாவும்,வாவ்யா என்று சொல்ல வைக்கும் சொக்கத் தங்கமாக ஜொலித்திருக்கிறார்.

அப்ப நாங்க யாரு என்று ஜோதிர்மயியும் சந்தில் புகுந்து சிந்து பாடியிருக்கிறாராம்.

யூனிட்டாரை, அடடா என்று சொல்ல வைக்கிறதாம் நாயகிகளின் ஆரோக்கியமான கிளாமர் போட்டி!

பிட்டுக் கணக்கில்தான் நாயகிகளுக்குத் தேவையான துணிகளை எடுத்திருக்கிறார்களாம். ஸ்னேகாவுக்கு போர்வை என்றால், ஜோதிர்மயிக்கு 10பிட்டு, கீர்த்திக்கு 8, மாளவிகாவுக்கு 4, நமீதாவுக்கோ 2 என்ற கணக்கில் காஸ்ட்யூம் இறங்கு வரிசையில் இருக்கிறதாம்.

படம் பிளேபாய் கதை என்பதால் ஐந்து நாயகிகளையும் வைத்து முடிந்த அளவுக்கு கிளாமரைக் கலந்து, பிசைந்து, பின்னி எடுத்து வருகிறார்கள்.எண்ணையில் போட்டு வறுத்து எடுத்த பிறகுதான் மொறு மொறுன்னு இருக்குமா, பிசு பிசுன்னு போகுமா என்பது தெரிய வரும்.

சென்சார்மார்களே, பார்த்து கட்டுங்க!

Read more about: actor jeevans naan avanillai

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil