twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'மீண்டும் வருவேன்'- நடுவுல கொஞ்சம் காணாமப் போன ஜீவன்!

    By Shankar
    |

    நிஜத்தில் கெட்டவனாக வாழ்ந்து நிழலில் நல்லவர்களாக வாழ்வதும் நிஜத்தில் நல்லவனாக வாழ்ந்து, நிழலில் கெட்டவர்களாக நடிப்பதும் சினிமாவின் இன்னொரு பக்கம்.

    இதுவரை ஏற்ற அனைத்து வேடங்களுமே நெகடிவ்தான் என்றாலும் ஜீவன் அப்படியொன்றும் கெட்டவனில்லை.

    சுமார் இரண்டரை வருடங்களாக திரை வட்டாரத்தில் இருந்து விலகி இருந்த ஜீவன் திடீர் அவதாரம் எடுத்திருக்கிறார்.

    கிருஷ்ண லீலை

    கிருஷ்ண லீலை

    நடுவுல கொஞ்சம் ஜீவனை காணோமே? என்று கேட்டோம்... அதற்கு ஜீவன் பதிலளிக்கையில், "கிருஷ்ணா லீலை முடிந்து ரிலீஸுக்கு தயாரானது. சில காரணங்களால் தடைப்பட்டுப் போனது. அது ரிலீஸாகி இருந்தால் இந்த இடைவெளி தெரியாமல் போயிருக்கும் ..

    அதோடு நான் கலையுலகில் பயணித்த காலம் வேண்டுமானால் அதிகமாக இருக்கலாம் ஆனால் நடித்த படங்கள் குறைவுதான். அதனால் இந்த இடைவெளி எனக்கு பெரிதாக தெரியவில்லை.

    இதையெல்லாம் விட சமீபத்தில் தான் என் அப்பா இறந்தார். எங்களுக்கு இருக்கிற வியாபாரங்களை ஒழுங்கு படுத்த வேண்டிய பொறுப்பில் நான் இறங்கியதால் இந்த இடைவெளி.

    செல்வா இயக்கத்தில்

    செல்வா இயக்கத்தில்

    வெளிநாட்டில் இருந்து சென்னை வந்ததும் செல்வா சார் ஒரு கதை சொன்னார். நான் எதிர்ப்பார்த்த திருப்தி அதில் இருந்தது. அதோடு ஏற்கனவே நானும் அவரும் நான் அவனில்லை பார்ட் 1, பார்ட் 2 ,தோட்டா என மூன்று படங்களில் இணைந்தோம். வெற்றிபெற்றோம். இது நான்காவது முறை.

    தயாரிப்பாளர் விஷ்வாஸ் சுந்தர் பெரிய தயாரிப்பாளர். அதனால் மீண்டும் வருவேன்.

    நல்லவரா கெட்டவரா?

    நல்லவரா கெட்டவரா?

    நீங்கள் நல்லவனா? கெட்டவனா ? ரெடிமேட் ஆடைகளை போல் கெட்டவன் பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திப் போகிறீர்களே?

    திருட்டு பயலே படத்தில் எனக்கு மட்டும்மல்ல... சோனியாஅகர்வால், மாளவிகா, அப்பாஸ் என எல்லோருக்குமே நெகடிவ் ரோல்தான். கிளைமாக்ஸில் நல்லவர்களாக மாறுவது மாதிரி முடித்திருந்தார் சுசிகணேசன். அது மாதிரி காக்க காக்க படத்தில், முழு வில்லன்.

    நான் அவணில்லையில் கெட்டவன் மாதிரியான நல்லவன் பாத்திரம். தோட்டாவில் கெட்டவன் ஒருவன் நல்ல போலீஸ்காரனை உருவாக்க முடியும் என கதாபாத்திரம்.

    சில கதாபாத்திரங்கள் என்னை முன்னிலைப் படுத்தியதால் அப்படியொரு வில்லன் தோற்றம் எனக்கு. அதுவும் என்னை லைம்லைடில் வைத்திருப்பதால் எனக்கு சந்தோசமே.

    டைட்டில் வேட்டை

    டைட்டில் வேட்டை

    இனி வேட்டை ஆரம்பித்து விட்டேன் நல்ல கதைகளையும், கதாபாத்திரங்களையும் வேட்டையாடி என்னை நான் நிலை நிறுத்தி கொள்வேன்... முதலில் செல்வா இயக்கும் படத்திற்கு நல்ல டைட்டிலை வேட்டையாடி கொண்டிருக்கிறோம் விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது," என்றார் ஜீவன்.

    English summary
    Director Jeevan is making his come back after 3 years and play lead role in Selva's new project.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X